பிப்ரவரி 1 முதல் 100 சதவீத டிக்கெட் அனுமதி.. மத்திய அரசு முடிவு..

by Chandru, Jan 31, 2021, 16:27 PM IST

கொரோனா ஊரடங்கால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. அடுத்த 8 மாதங்கள் வரை தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட வில்லை. ஆனால் மத்திய அரசு அதற்கு முன்மாதமே தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கியது, அத்துடன் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் முககவசம் சேனிடைசர், சமூக இடைவெளி, 50 சதவீத டிக்கெட் அனுமதி, ஆன்லைன் டிக்கெட் பதிவு என்று பல்வேறு வழிமுறைகள் விதித்தன. இதனால் வசூல் குறைந்தும் பெரிய படங்கள் வெளியிடப்படாமலும் இருந்தன. இந்த கட்டுப்பாடுடன் வந்த மாஸ்டர் போன்ற ஒரு சில பெரிய படங்கள் மட்டும் வசூலை ஈட்டின. சினிமா அரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ்களில் 100 சதவீத அனுமதியை தற்போது மத்திய அரசு வழங்குகிறது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சினிமா அரங்குகள் மற்றும் திரையரங்குகளுக்கான நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்திய திரைப்பட விமர்சகரும் வர்த்தக ஆய்வாளருமான தரன் ஆதர்ஷ் தனது இன்ஸ்டாகிராம் இந்த செய்திகளைப் பகிர்ந்துள்ளார். அவர் "BIGGG NEWS ... சினிமாக்கள் / திரையரங்குகளில் / மல்டிபிளெக்ஸில் 100% இருக்கை வசதி அனுமதிக்கப்படுகிறது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் வழிகாட்டுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன" என தெரிவித்திருக்கிறார். எந்தவொரு படங்களும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் திரையிடப்படாது.

பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சினிமா அரங்குகளில் முகமூடிகள் மற்றும் வெப்ப நிலை சோதனை கட்டாயமாக்கப்படுகிறது. தியேட்டர்களில் பிரிக்கப்பட்ட இருக்கைகள், மாற்றி அமைக்கப்பட்ட நிகழ்ச்சி நேரங்கள் மற்றும் முன்பதிவுகள், கட்டாய சமூக இடைவெளி மற்றும் டிஜிட்டல் புக்கிங்குகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு 100 சதவீத அனுமதி அனுமதித்தாலும் தமிழ்நாட்டில் அது அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசு 100 சதவீதம் டிக்கெட் அனுமதி வழங்க தயாராக உள்ளது. ஆனால் சில அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் கோர்ட்டில் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. இப்படித்தான் பொங்கல் படங்களுக்கு 100 சதவீதம் டிக்கெட் அனுமதியை அரசு வழங்கியது பிறகு எதிர்ப்பு கிளம்பியதால் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

You'r reading பிப்ரவரி 1 முதல் 100 சதவீத டிக்கெட் அனுமதி.. மத்திய அரசு முடிவு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை