பிரபாஸ் நடிக்கும் படம் ஆதி புருஷ். ராமாயண புராண கதையை தழுவி இப்படம் உருவாகிறது. ராமராக பிரபாஸ், ரவணனாக இந்தி நடிகர் சயீப் அலிகான் நடிக்கின்றனர். இந்தி பட இயக்குனர் ஓம் ரவுத் இயக்குகிறார். இப்படம் ரூ 400 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. 3டி அனுமேஷன் கேப்சர் முறையில் இப்படம் உருவாக்கப்பட்டாலும் நிஜ நடிகர்கள் பங்கேற்று நடிக்கின்றனர்.
ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நேற்று தொடங்கியது. காலை முதல் முக்கிய காட்சிகளை இயக்குனர் படமாக்கினார் நேற்று மாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு அரங்கத்தில் தீ பரவியது. உடனடியாக தீ அணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் லட்சக்கணக்கில் செலவு செய்து போட்டப்பட்ட அரங்கு நாசமானது. ஆனால் உயிர் சேதம் எதுவும் இல்லை. தீ விபத்தின்போது அரங்கில் பிரபாஸ் இல்லை.
அவர் தெலங்கானா ராம குண்டா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்க பகுதியில் சலார் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இப்படத்தை கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் டைரட்கு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆதி புருஷ். இது 3 டி வடிவில் அனிமேஷன் கேப்சரில் உருவாகிறது. ஆதிபுருஷ் படம் பற்றி கடந்த 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 2020 இல் வெளியிடப்பட்ட போதிலும், படம் நேற்று(பிப்ரவரி 2) நடிகர்கள் மற்றும் குழுவினரின் முன்னிலையில் ஷூட்டிங் தொடங்கியது. ஆதிபுருஷின் டைட்டில் சின்னத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பிரபாஸ் இதனை அறிவித்தார். ஆதிபுருஷ் ஆரம்ப் என்று குறிப்பிடப்பட்டுள்ள அதில் ஆரம்ப் என்ற வார்த்தை படம் ஆரம்பித்ததை குறிப்பிடுகிறது.
தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைமையப் படுத்தியுள்ள இந்திய காவியம் ராமாயணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ஹீரோயினாக கிரித்தி சனோன் நடிப்பார் என்று தெரிகிறது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்படும். படத்தின் பெரும் தொகை வி.எஃப்.எக்ஸ் தொழில் நுட்பத்துக்கு செலவிடப்படும். பல ஹாலிவுட் படங்களில் செய்வதுபோல் கிரீன் மேட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆதிபுருஷ் முழுவதுமாக படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. படத்தின் கிராபிக்ஸ் வேலை செய்வதற்காக அவதார் மற்றும் ஸ்டார் வார்ஸின் விஎஃப்எக்ஸ் தொழில் நுட்ப மேற்பார்வையாளர்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். ஆதிபுருஷ் படம் 11.08.2022ம் ஆண்டு வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருக்கிறது.