டாய்லெட்டில் அமர்ந்து போஸ்: பிரபல நடிகை பரபரப்பு..

சினிமாவில் எதார்த்த படங்கள் என்ற ஒரு பிரிவில் சமூகத்தில் தினசரி காணும் நிகழ்வுகள் அப்பட்டமாக சொல்லும் படங்கள் உருவாக்கப்படுகின்றன. அதுபோன்ற மக்களின் வாழ்வியலோடு கூடிய படங்கள் வெற்றி பெறுவதுடன் உலக அளவில் பல்வேறு விருதுகள் பெற்று வருகின்றன. டுலெட், மேற்கு தொடர்ச்சி மலை, தேன் இப்படி பல படங்கள் சமீப காலத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கின்றன. எதார்த்தததை மீறி செயற்கையான காட்சிகளுடன் கூடிய படங்கள் பொழுது போக்கு படங்களாக அமைகின்றன. நகரியல், கிராமப் பகுதியில் எதார்த்தங்கள் மாறுபடுகின்றன. பாத்ரூம், டாய்லெட் போன்ற விஷயங்கள் வெளிப்படையாக பொது வெளியில் பேசுவதற்கு இன்னமும் பெரும்பாலான மக்கள் மத்தியில் தயக்கம் இருக்கிறது. ஒரு சில படங்கள் அதுபோன்ற காட்சிகளையும் பதிவு செய்கின்றன. ஆண், பெண் இருபாலருக்கும் இயற்கை உபதைகள் பொதுவானது தான். அதை பதிவு செய்யும் படங்கள் மிக மிக குறைவு.

தமிழில் மிக மிக அவசரம் என்ற படம் 2019ம் ஆண்டு திரைக்கு வந்தது. பெண் போலீஸாக ஸ்ரீ பிரியங்கா நடித்திருந்தார். அவரை சாலையில் பாதுகாப்புக்கு பந்தோபஸ்த்துக்கு நிற்க வைப்பார் உயர் அதிகாரி. காலை முதல் மாலை வரை அங்கு காவலுக்கு நிற்கும் அவருக்கு இயற்கை உபாதை ஏற்பட்டு அதற்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலையை இப்படம் விளக்கும். இப்படத்தை சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்தார். ஈரானிய படங்கள், ஜெர்மன் படங்கள் எதார்த்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகின்றன. பாத்ரூம் விஷயத்தை மட்டுமல்லாமல் மக்களின் மன உணர்வு, குடும்ப உணர்வு, வாழ்கை போராட்டங்களையும் இக்கதைகள் பேசுகின்றன. அதன் பிரதிபலிப்பாக மிஷ்கின், வெற்றிமாறன் போன்ற ஒரு சில இயக்குனர் தங்கள் படங்களை இயக்குகின்றனர். ஜெர்மன் படம் ரன் லோலா ரன் என்ற கதையை தழுவி இந்தியில் லூப் லபெடா என்ற படம் உருவாகி இருக்கிறது.

இதில் டாப்ஸி ஹீரோயினாக நடித்திருக்கிறார். வாழ்க்கை சரித்திர படம், யதார்த்த படங்கள் என்றால் டாப்ஸியின் கால்ஷீட் உடனே கிடைத்துவிடுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மூடப்பட்டிருக்கும் டாய்லெட் சீட் மீது அவர் அமர்ந்து போஸ் தந்திருக்கிறார். இந்த படம் நெட்டில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பச்சை நிற டி ஷர்ட், கருப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்திருக்கிறார். இந்த காட்சி பற்றி டாப்ஸி சமூக வலைதள பக்கத்தில் கூறும்போது, வாழ்க்கையில் நம்மை நாமே ஒரு கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டிய நேரம் வருகிறது. இங்கே நான், எப்படி? இது எப்படி முடிந்தது? என்று அந்த கேள்வி இருக்கும். நானும் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்த டாய்லெட் மூடி மீது அமர்ந்தது பற்றி அல்ல. இந்த வாழ்க்கையில் அமர்ந்தது பற்றி என குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :