சர்வதேச பட விழாவில் நயன்தாரா தயாரித்த படம்..

நடிகை நயன்தாரா முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இப்படத்தைச் சிறுத்தை சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். அடுத்து விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் மற்றொரு ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். நெற்றிக்கண் படத்திலும் நயன்தாரா நடிக்கிறார். இதில் அவருடன் அஜ்மல், மணிகண்டன், சரண் ஆகியோரும் நடிக்கின்றனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் சென்றார் நயன்தாரா. அங்கு ரஜினிகாந்த்துடன் கலந்து கொண்டு நடித்தார். சில நாட்களில் படப் பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஐதராபாத்திலேயே நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங் நடந்து வந்தது. உடனடியாக அவரும் அந்த படப்பிடிப்பை நிறுத்திவிட்டு நயன்தாராவை அழைத்துக்கொண்டு சென்னை திரும்பினார்.விக்னேஷ் சிவன், நயன்தாரா தங்களது பட நிறுவனம் சார்பில் படங்கள் தயாரிக்கின்றனர். நெற்றிக்கண் படத்தை இருவரும் தயாரிக்கின்றனர்.

இதில் நயன்தாரா நடிக்கிறார்.விக்னேஷ் சிவன் நயன்தாரா தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தை மிலண்ட் ராவ் இயக்குகிறார்.இந்நிலையில் கூழாங்கல் என்ற படத்தை விகேஷ் சிவன், நயன்தாரா பார்த்தனர். அது அவர்களுக்கு மிகவும் பிடித்து விடவே அப்படத்தை தங்களது நிறுவனத்தில் தயாரித்து ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். இப்படத்தை பிஎஸ்.வினோத் ராஜ் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தந்தை மகனுக்கும் இடையேயான உறவை எதார்த்தமாகக் கூறும் கதை. தற்போது கூழாங்கல் படத்தைச் சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்பி வருகின்றனர். ரோட்டர்டாம் பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது. அந்த விழாவுக்குப் பட இயக்குனர் மற்றும் அதில் நடித்திருக்கும் சிறுவனுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சென்று விழாவில் கலந்து கொண்டனர். அங்கிருந்து அதற்கான படங்களை விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார், படம் சர்வதேச விழாவில் திரையிடப்படும் விவரம் பற்றி அவர் அதில் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :