நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்கு பிறகு சஹோ படத்தில் நடித்தார். இதுபெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தார். அல்லு அருஜீனுடன் அவர் நடித்த அல வைகுந்த புரமுலு படத்தில் நடித்த புட்ட பும்மா பாடல் பூஜாவை முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடிக்க வைத்தது.தற்போது பிரபாஸுடன் நடிக்கும் ராதே ஷியாம் காதல் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு கொரோனா கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கி நடக்கிறது.
இத்தாலியில் இதன் படப்பிடிப்பைத் தொடங்கிய நிலையில் அங்குப் படப்பிடிப்பு நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை படக் குழு எதிர் கொண்டது.இப்படத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு கதாபாத்திரம் தற்போதைய காலகட்டத்தில் உள்ளது போலவும் இன்னொரு கேரக்டர் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த கதாபாத்திரம் போலவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஐதராபாத் ராமோ ஜிராவ் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அதில் மறைந்த இந்திரா காந்தியை பிரபாஸ் சந்தித்துப் பேசுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காகப் பிரதமர் அலுவலகம்போல் அரங்கு அமைக்கப்பட்டது. பிரபாஸ் எதற்காக இந்திராகாந்தியை சந்திக்கிறார் என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருக்கிறது.
இதுபற்றி அறியப் படம் திரைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்கிறது படக் குழு.
ராதே ஷ்யாம் படத்திலிருந்து பிரபாஸ் பூஜா ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. மோஸ்ஹ்ன் போஸ்டரும் வெளியாகி கவர்ந்தது. அடுத்துப் படத்தின் டீஸரை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி ராதே ஷ்யாம் டீஸர் வெளியாக உள்ளது.ராதே ஷ்யாம் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்து அடுத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது.
மேலும் படத்தை ரிலீஸ் செய்வதற்கும் பொருத்தமான தேதியை பட இயக்குனர் ராதே கிருஷ்ண குமார் ஆலோசித்து வருகிறார். பிரபாஸை பொருத்தவரை இதுதவிர மேலும் 2 பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார், ஓம் ரவுத் இயக்கத்தில் ஆதி புருஷ் ஆகிய படங்களும் படப்பிடிப்பில் உள்ளன.ராதே ஷ்யாம், சலார், ஆதி புருஷ் என பிரபாஸின் 3 படங்களும் பான் இந்தியா படமாகத் தமிழ், தெலுங்கு இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. சுமார் 900 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் படங்களாகவை இவை தயாராகிறது.