மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இப்படத்தையடுத்து தனுஷ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார்.துருவங்கள் பதினாறு நரகாசூரன் படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இவர் தற்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். டி 43 எனக் குறிப்பிடப்படும் இதன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 8 முதல் ஐதராபாத்தில் நடக்கிறது. இப்படத்தில் முதல் முறையாக மாளவிகா மோகனன் தனுஷுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நேற்று முடிந்தது. தனுஷுடன் இருக்கும் இரண்டு படங்களைப் பகிர்ந்த மாளவிகா அதுபற்றி டிவிட்டரில் மெசேஜ் பகிர்ந்தார்.
அதில் "என் சக நடிகர் தனுஷுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. உங்கள் ஈர்ப்பான சிரிப்பை தற்போதைக்கு இழக்க நேரிடும் , தினமும் உங்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்கிறேன். முதல் கட்ட படப்பிடிப்பு பிரமாதமாக நடந்தது. இரண்டாவது கட்ட பட்பிடிப்பில் பங்கேற்கக் காத்திருக்கிறேன்" என குறிபிட்டுள்ளார் மாளவிகா.நடிகர் ருஸ்ஸோ பிரதர்ஸ் (அவென்ஜர்ஸ் பட புகழ்) இயக்கும் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் பணிகளைத் தொடங்க உள்ளார் தனுஷ், இதற்காக டி43 படத்திலிருந்து இப்போது நீண்ட இடைவெளி எடுக்கிறார்.
தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க இப்போது வெளிநாடு செல்வார். அவர் கார்த்திக் நரேனின் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு மே மாதத்தில் திரும்புவார் என்று தெரிகிறது.இதற்கிடையில், டி 43 குழு தனுஷ் இடம்பெறாத காட்சிகளை படமாக்க உள்ளனர். ஏற்கனவே தனுஷின் தொடக்கப் பாடலுக்காகக் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதை தனுஷே பாடி இருந்தார். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்தார். இந்த காட்சியில் தனுஷுடன் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோர் பங்கேற்றனர்.உணர்ச்சிப்பூர்வமான ஆக்ஷன் த்ரில்லர் கதை கொண்ட படமாக டி 43 படமாக உள்ளது. இந்த படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா இருவரும் பத்திரி கையாளர்களாக நடிக்கின்றனர்.கடந்த 30 நாட்களாக ஐதராபாத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மற்றும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்திற்கு ஸ்டைலான பின்னணி வேண்டும் என்று முடிவு செய்த இயக்குனர் கார்த்திக் நரேன் ஐதராபாத்தில் ஹைடெக் சிட்டியில் ஆடம்பர கட்டிடங்கள் கொண்ட பகுதியில் படமாக்கினார் என்று பட வட்டாரம் தெரிவிக்கிறது.