டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை!

Advertisement

TNPSC தேர்வாணையத்திலிருந்து காலியாக உள்ள உதவி வேளாண் அலுவலர் & உதவி தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 04.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 429

உதவி வேளாண் அலுவலர்- 106+16* (முந்தைய காலிப்பணியிடங்கள் சேர்த்து)

உதவி தோட்டக்கலை அலுவலர் - 204 + 103* (முந்தைய காலிப்பணியிடங்கள் சேர்த்து )

கல்வி தகுதி:

உதவி வேளாண் அலுவலர் : 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் இரண்டாண்டு டிப்ளமோவில் வேளாண்மை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவி தோட்டக்கலை அலுவலர் : பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் இரண்டாண்டு டிப்ளமோவில் தோட்டக்கலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை இருக்கும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கும்.

கட்டணம்: ரூ. 100 /- (முதல் முறையாகப் பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150). கட்டணத்தைச் செலுத்தும் முறை : Net banking / Credit card / Debit card.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் online மூலம் 04.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. இதர விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் www.tnpsc.gov.in

https://tamil.thesubeditor.com/media/2021/02/02_2021_AAO&AHO_Eng.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>