விஜே சித்ரா திடீரென்று நட்சத்திர ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவரது கடைசி தருணத்தில் அவரது கணவரும் கூட இருந்ததால் அவரை சந்தேகப்பட்டு போலீஸ் விசாரணை நடத்தியது. இந்நிலையில் சித்ராவின் பிரேத பரிசோதனையில் தற்கொலை என்பது உறுதியானது. இதை தொடர்ந்து அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்ற கோணத்தில் விசாரணை திரும்பியது.
சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிருடன் நெருங்கி நடிப்பதால் சந்தேகப்பட்ட ஹேம்நாத் அடிக்கடி சித்ராவுடன் சண்டை பிடித்துள்ளார். சம்பவ தினத்தன்றும் சித்ரா ஒரு நிகழ்ச்சியில் கதிருடன் நடனம் ஆடியுள்ளார். இதனால் கோவப்பட்ட ஹேம்நாத் 'செத்து தொல' என்று கூறி ரூமுக்கு வெளியே சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டது.
இதனால் ஹேம்நாத் கொடுத்த டார்ச்சரால் தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்று அவரை போலீஸ் கைது செய்தது. சித்ராவின் மரணத்துக்கு நீதி கிடைக்க அவரது ரசிகர்கள் முழு மூச்சாய் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சித்ரா வீட்டில் அவரது உருவப்படம் பெரிதாய் வைக்கப்பட்டு மாலை, பூ போன்ற வாசனை பொருள்களால் அலங்கரித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானதை குறித்து அவரது ரசிகர்கள் உங்களை இப்படி பார்க்கவா ஆசைப்பட்டோம்.. என்று உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.