வாழும்போது நிறைவேறாத நடிகை ஆசை.. இறந்த பின் நிறைவேறுகிறது..

Advertisement

சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து .இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ். இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி வெளிவந்த இரண்டே நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது ட்ரெய்லர் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் 1.5மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது.

மேலும் இந்த படத்தில் எடுக்கப்பட்டுள்ள பல காட்சிகள், இவருடைய சொந்த வாழ்க்கைக்கு தொடர்புடையதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.எஸ். ஜெயக்குமார், ஜெ.காவேரி, திரு.ஜெ.சபரிஷ் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். திரு.ஜெ. சபரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். தமீன் அன்சாரி இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரத் தயாராகவுள்ளது.

இறந்த நடிகை வி ஜே சித்ரா முன்னதாக விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா. இதற்கு முன்பு வி.ஜே-வாக இருந்த இவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, வேறு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம்தேதி அதிகாலை 02.30 மணி அளவில், ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்தார் சித்ரா. அங்கு ஹேம்நாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். அந்த அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீஸார் கடந்த மாதம் 14-ம் தேதி கைது செய்தனர்.

பின்னர், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.சினிமாவில் நடித்து முன்னணி நடிகை ஆக வேண்டும் என்று சித்ரா எண்ணியிருந்தார். அவரது ஆசைக்கு அச்சாரமாக இன்றைக்குப் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது கால்ஸ் டிரெய்லர். வாழும் போது எண்ணியிருந்த சித்ராவின் லட்சியம் அவர் மறைந்த பின் நிறைவேறி வருவதாக ரசிகர்கள் உருக்கம் தெரிவிக்கின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>