இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.அதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் ஐதராபாத்தில் நடைபெற்றது.அதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு எந்தவித இடையூறும் இல்லாமல் முடிந்துவிட்டதாக அறிவித்த விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் பக்கத்தில் கூறும்போது. “காத்து வாக்குல ரெண்டு காதல் இரண்டாவது கட்ட படப் பிடிப்பு கடவுளின் அருளால் அழகாக முடிந்தது. பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
இதற்கிடையில், காத்து வாக்குல ரெண்டு காதல் ஒரு கலவரமாக இருக்கப்போகிறது என்று சமந்தா தனது ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார். நயன்தாரா நடிப்பில் கடுமையானவர் மற்றும் விஜய் சேதுபதி வலிமை வாய்ந்தவர் அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். எனவே நான் எனது வேலையை எவ்வளவு பொருத்தமாகச் செய்கிறேன் என்று சொல்ல முடியாது. அவர்கள் இருவரும் சேர்ந்துள்ள இப்படம் ஒரு கலவர படமாக இருக்கும் என்று சொல்ல முடியும். இயக்குனர் விக்னேஷ் சிவன் காட்சிகளை அதிர விட்டிருக்கிறார்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ இணைந்து இந்த இரு மொழி படத்தைத் தயாரிக்கிறது. இதன் இசை பொறுப்பை அனிருத் ஏற்றுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிடோரின் முப்பரிமான காதல் கதையைக் கொண்டுவருவதாக இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக கடந்த 2020ம் ஆண்டே காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பை முடித்து வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா லாக்டவுன் அந்த திட்டத்தைத் தடுத்து நிறுத்திவிட்டது. கொரோனா தளர்விலும் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க முடியாமலிருந்தது. விஜய் சேதுபதி பிற படங்களில் பிஸியாக இருந்தார். அதேபோல் நயன்தாரா அண்ணாத்த உள்ளிட்ட சில படப்பிடிப்பில் இருந்தார். சமந்தா லாக்டவுன் தளர்வில் கணவர் நாக சைதன்யாவுடன் மாலத்தீவு சென்றிருந்தார். ஒருவழியாக விடுமுறை பயணம் முடிந்து வந்தார் சமந்தா. விஜய் சேதுபதியும் தனது கால்ஷீட்டை இப்படத்துக்கு ஒதுக்கித் தந்தார்.
இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கியது. விஜய் சேதுபதி, சமந்தா நடித்த காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. அதேநேரம் நயன்தாரா ரஜினியுடன் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். அவரது படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடந்தது. திடீரென்று அண்ணாத்த படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதால் அதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினி சென்னை திரும்பினார். நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவனும் தனது பட ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில்தான் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு சத்தமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது.