தனுஷ் டப்பிங் பேசி முடித்த படம் ஏப்ரலில் வெளியீடு..

Advertisement

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படம் ஓடிடியில் வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்தது. இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தனுஷ், கார்த்திக் சுப்பராஜுக் கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படத்தை தியேட்டரில் வெளியிடுவார்கள் என நம்புவதாக அவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.இதனால் ரசிகர்களையும் தியேட்டர் அதிபர்களையும் சமாதானப்படுத்தும் வகையில் மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷின் 'கர்ணன்' படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவதாகச் சமீபத்தில் அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, நட்சத்திர நடிகரின் ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் கர்ணன் படத்தில் ராஜீஷா விஜயன் ஹீரோயினாக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் லால், நடராஜன் சுப்பிரமணியன் என்கிற நட்டி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.தனுஷ் படத்துக்குக் கர்ணன் என்று பெயரிடப்பட்டதால் சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிவாஜி நடித்த கர்ணன் முத்திரை பதிக்கும் படங்களில் ஒன்று. கர்ணன் என்றாலே சிவாஜி ஞாபகம் தான் வரும் எனவே அவர் நடித்த படத்தின் டைட்டிலை தனுஷ் படத்துக்கு வைக்கக் கூடாது என்று சிவாஜி பேரவை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை படத்தரப்பு ஏற்கவில்லை. கர்ணன் படத்துக்கும் இதற்கும் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லை. இது அதிலிருந்து மாறுபட்ட கதை, தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் கர்ணன் எனவே அந்த பெயர் வைக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது.இதுபற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் 'கர்ணன்' என்று பெயரிட்டதன் காரணத்தை வெளிப்படுத்தியதோடு, படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தின் பெயர் கர்ணன் என்றும் அதனால் படத்துக்கு அந்த தலைப்பு வைக்கப்பட்டது என்றும் விளக்கினார். 'கர்ணன்' வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட உள்ளது, படம் தணிக்கை செய்யப்பட்டவுடன் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இப்படத்துக்கான டப்பிங் பணியை தனுஷ் பேசி முடித்துள்ளார். பட டீஸர் விரைவில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.தனுஷ் விரைவில் அமெரிக்கா புறப்பட்டு சென்று ஹாலிவுட் டில் தி கிரே மேன் பட படப் பிடிப்பில் பங்கேற்கிறார். அவஞ்சர்ஸ் படத்தை இயக்கிய இயக்குனர்கள் இதனை இயக்குனர். ஹாலிவுட் பிரபல நடிகர்கள் இதில் நடிக்க உள்ளனர். வெளிநாடு புறப்படுவதற்கு முன் தனுஷ் நேற்று சென்னை போயஸ் கார்டனில் புதுவீடு கட்டுவதற்கான பூமி பூஜை செய்தார். இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>