சிவாத்மிகாவை கவுதம் ஜோடியாக்கியது ஏன்? காரணம் சொன்ன இயக்குனர்..

by Chandru, Feb 11, 2021, 10:18 AM IST

விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தொரசானி என்ற தெலுங்கு படம் மூலம் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் சிவத்மிகா. டாக்டர் ராஜசேகர், ஜீவிதா மகளான இவர் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அதற்கான பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். ஜிகினா பட இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார், இவர் டாப்ஸி நடித்த இந்தி படம் ராஷ்மி ராக்கெட்டுக்காக கதையையும் எழுதியுள்ளார்,புதிய படத்தில் கவுதம் கார்த்தி ஹீரோ. ஒரு கிராமப்புற குடும்ப கதை.

“ஒரு இளைஞன் பிரிந்து போன தனது குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைப்பது பற்றிய எளிய கதை. பிக் பாஸ் போன்ற ஒரு நிகழ்ச்சியை நாம் பார்க்கும்போது, ​​ஹவுஸ் மேட்ஸ் அமைதி உணர்வை உறுதிப்படுத்தக் கடுமையாகப் பாடுபடுகின்றனர். அதே போல் மனக் கசப்பில் பிரிந்திருக்கும் உறவுகளைக் கவுதம் எவ்வாறு இணைக்கிறார் என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது. இது வருஷம் பதினாறு படத்தின் சாயலில் இருக்கும் (கவுதமின் தந்தை கார்த்திக், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது) வரிசையில் இருக்கும். இப்படத்திற்கு சிவாத்மிகாவில் ஒப்பந்தம் செய்யப்பட்டது ஏன் என்பது பற்றி இயக்குனர் கூறினார்.

இப்படத்தின் ஹீரோயின் நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினேன், அதற்கு சிவாத்மிகா பொருத்தமாக இருந்தார். அவர் படத்தில் உள்ளூர் தொலைக் காட்சி தொகுப்பாளராக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகவும் அருமையானது, அதே நேரத்தில் கவுதம் ஒரு அமைதியான இளைஞனாக நடிக்கிறார். சிவாத்மிகாவை அவரது பாத்திரத்திற்காக ஆடிஷன் செய்தேன். அவரது தாயார் ஜீவிதா போலவே இருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர்.இயக்குனர் சேரன், கவுதமின் மாமாவாக நடிக்கிறார். சரவணன், டேனியல் பாலாஜி மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் ”என்றார் இயக்குனர்.இப்படத்தின் முழு படப்பிடிப்பும் திண்டுக்கல்லில் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி படமாக்கப்படும். இப்படத்திற்கு சித்து குமார் இசை அமைக்கவுள்ளார்.இவ்வாறு இயக்குனர் கூறினார்.

You'r reading சிவாத்மிகாவை கவுதம் ஜோடியாக்கியது ஏன்? காரணம் சொன்ன இயக்குனர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை