சமீபகாலமாக பிரபல இயக்குனர்கள் மணிரத்னம், ராஜமவுலி, பிரசாந்த் நீல், ஓம் ராவுத் போன்றவர்கள் ஒரே சமயத்தில் பல மொழியை சேர்ந்த மல்டி ஸ்டார்கள் நடிக்கும் படங்களை இயக்கி வருகின்றனர். மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி, ரஹமான், ஐஸ்வர்யாராய், திரிஷா என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்திருக்கிறது. இயக்குனர் ராஜமவுலி தற்போது ஆர் ஆர் ஆர் என்ற படத்தை 5 மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் ராம் சரண், ஜுனியர் என் டி ஆர் நடிக்கின்றனர். இவர்களுடன் அஜய்தேவ்கன், அலியாபட் நடிக்கின்றனர். பிரசாந்த் நீல் கே ஜி எஃப் சேப்டர் 2 படத்தை இயக்குகிறார். இதில் யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் நடிக்கின்றனர்.
அதே வரிசையில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தையும் மல்டி ஸ்டார் படமாக இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இயக்குனர் ஓம் ராவுத் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தை இயக்குகிறார். இதில் இந்தி நடிகர் சயீப் அலிகான் நடிக்கிறார். இந்த பட்டியலில் இயக்குனர் ஷங்கர் இணைகிறார் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் இந்தி நடிகர் அக்ஷய்குமாரை வில்லனாக அறிமுகப்படுத்தினார் ஷங்கர். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். அதன் படப்பிடிப்பு தள்ளிப்போய் இருப்பதால் புதிய படம் இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார் . சமீபத்தில் ராம் சரணை சந்தித்து தான் இயக்கவுள்ள மல்டி ஸ்டார் கதையை ஷ்ங்கர் சொல்ல அவருக்கு பிடித்து விட்டது.
அவர் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார். இவர்களுடன் கே ஜி எஃப் நடிகர் யஷ் நடிப்பார் என்று தெரிகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த 2022ம் ஆண்டு தொடங்க உள்ளது. இப்படத்தை 5 மொழிகளில் பிரபல டோலிவுட் பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார். இந்திய2 படத்தை பொருத்த வரை இரண்டு கட்ட படப்பிடிப்பு நடந்துள்ளது. இதன் படப்பிட்ப்பின்போது கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. உயிர் பலி ஏற்பட்டது. அதற்கு கோடிகளில் இழப்பீடு தரப்பட்டது. இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டை குறைக்கும்படி தயாரிப்பு நிறுவனம் ஷங்கரிடம் கேட்டது ஏறகனவே பட்ஜெட் குறைத்த நிலையில் மீண்டும் குறைக்க முடியாது என்று தெரிவித்தார். இந்த சிக்கல் நீடிப்பதால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.