விஜய் மக்கள் மன்ற மாஜி தலைவருக்கு மிரட்டல்.. போலீஸில் புகார்..

by Chandru, Feb 12, 2021, 14:03 PM IST

தளபதி விஜய்க்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அமைத்தார் விஜய். திரைப்படங்களில் அரசியல் கருத்துக்கள் கூறும் விஜய் தனிகட்சி தொடங்குவார் என்று கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் பரவி வருகிறது. ஆனால் அவர் தற்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று தெரிவித்து வந்தார். விஜய் அரசியலில் ஈடுபடுவது பற்றிய கேள்விகளுக்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் பதில் அளித்து வந்தார். இது விஜய்க்கு பிடிக்கவில்லை. தான் அரசியல் ஈடுபடுவது பற்றி தனக்கு தெரியாமல் எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்று விஜய் தனது தந்தையிடம் கூறி வந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன் எஸ்.ஏ.சந் திரசேகர், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் அலுவலகத்தில் கட்சியை பதிவு செய்தார். இதுபற்றிய தகவல் வெளியானதும் அதிர்ச்சி அடைந்த விஜய் தன் தந்தை தொடங்கிய கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அவருக்கு என் ஆதரவு இல்லை. விஜய் மக்கள் இயக்கத்தினரும் எனது தந்தையுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அவரது கட்சியில் சேர்வதோ அல்லது கட்சி பணியாற்றுவதோ கூடாது என கடுமையாக எச்சரித்து அறிக்கை வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சந்திரசேகர் தான் பதிவு செய்த விவரங்களை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுத்தினார். மேலும் தனக்கு தெரியாமல் தன் தந்தையுடன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் தொடர்பில் இருப்பதாக கூறி அவர்களை இயக்கத்திலிருந்து விஜய் நீக்கினார். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவிராஜா, துணைச் செயலாளராக பதவி வகித்த ஏ.சி.குமார் ஆகியோர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதன் இயக்க பொறுப்பாளர் ஆனந்த் அறிவித்தார். முன்னதாக, நீக்கம் செய்யப்பட்ட இருவரும் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
நடிகர் விஜய் அவர்களை வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறப்பட்டது. ஆனால், அறையை காலிசெய்யாமல் இருந்து வந்தனர்.

இதையடுத்து நடிகர் விஜய் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது வீட்டில் இருப்பவர்களை காலிசெய்து தரும்படி கூறினார். விஜய் சார்பில் வழக்கறிஞர்கள் விருகம் பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தனர். இது பரபரப்பானது. இந்நிலையில் முன்னாள் விஜய் மக்கள் மன்ற தலைவராக இருந்த ஜெயசீலன் என்பவருக்கு மிரட்டல்கள் வருகிறதாம். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளிக்க உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஜெயசீலன் ஆகிய நான், முன்னாள் விஜய் மக்கள் மன்ற தலைவராக பொறுப்பில் இருந்துள்ளேன். சில காரணங்களால் நான் அப்பதவியில் தொடரவில்லை. சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் என்னை பேட்டி கண்டனர். அப்போது மன்றத்தின் நன்மைக்காக நான் கூறிய சில கருத்துக்களை சில புல்லுருவிகள் திருத்திக்கூறி எனக்கும் மன்ற பிள்ளைகளுக்கும் இடையே பிரச்சினையை உருவாக்கி உள்ளனர். இதனால் எனக்கு மிரட்டல்களும் வருகின்றது. இது சம்மந்தமாக பாதுகாப்பு கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

You'r reading விஜய் மக்கள் மன்ற மாஜி தலைவருக்கு மிரட்டல்.. போலீஸில் புகார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை