தனுஷ் நடிக்கும் கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் - ரிலீஸ் தேதி.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கர்ணன். இப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. அதில் தனுஷ் கைவிலங்குடன் காணப்படுகிறார்.அவருக்கு பின்னால் மக்கள் திரண்டு நிற்கின்றனர். கர்ணன் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. நடிகர் தனுஷ் தனது சமூக ஊடக பக்கத்தில் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் பகிர்ந்து, “ கர்ணன் முதல் தோற்றம் மற்றும் தியேட்டர் வெளியீடு” என குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் மாரி செல்வ ராஜும் தனது சமூக ஊடகப்பக்கத்தில் பர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்டார்.

அதில், "நீதிக்கான ஆத்மா ஒருபோதும் இறக்கவில்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் கர்ணன் என தெரிவித்திருக்கிறார். கர்ணன் படத்தில் ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா சந்திரமவுலி, நடராஜன் சுப்பிரமணியன், யோகி பாபு, அழகம் பெருமாள், லால் மற்றும் கவுரி ஜி கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் நிறைவடைந்தது. இதுபற்றி தனுஷ் ஒரு படத்தை மாரி செல்வராஜுடன் பகிர்ந்து கொண்டு இயக்குனருக்கு நன்றி தெரிவித்தார். கர்ணன் படப்பிடிப்பு முடிந்தது. இதை எனக்கு வழங்கியதற்கு மாரி செல்வராஜ் நன்றி.

பட தயாரிப்பு நிறுவனம் வி கிரியேஷன் மற்றும் சக நட்சத்திரங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த சிறப்பு படத்திற்காக சிறந்த இசை வழங்கி சந்தோஷ் நாரயாணனுக்கு ஒரு சிறப்பு நன்றி என குறிப்பிட்டார். இதற்கிடையில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படம் தியேட்டர் ரிலீஸ், ஒடிடி ரிலீஸ் என இரண்டு தளத்திலும் வெளியிடுவது குறித்து ஆலோசனைகள் நடக்கிறது. இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இதுதவிர கார்த்திக் நரேன் படம் மற்றும் இந்தியில் அடரங்கி ரே, ஹாலிவுட்டில் தி கிரே மேன் போன்ற படங்களில் தனுஷ் நடிக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :