கமலின் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டது? ஷங்கர்-கமல் வேறு படங்களில் பிஸி..

Advertisement

கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். சுமார் 25 வருடத்திற்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் அதாவது இந்தியன் 2 படம் உருவாக்க முடிவானது, ஷங்கர் இயக்க கமல்ஹாசன் நடிக்கிறார். இதில் இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார் கமல் . சித்தார்த், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் ஆகினர். லைகா புரடக்‌ஷன் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு தொட்டமே மோதலுடன் ஆரம்பித்தது.படப்பிடிப்பு தொடங்கி 6 நாட்களில் பட்ஜெட் விஷயத்தில் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதில் சமரச பேச்சு நடந்தது. குறிப்பிட்ட அளவு பட்ஜெட் குறைக்க ஷங்கர் ஒப்புக்கொண்டார். பிறகு படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் சென்னை ஈ வி பி ஸ்டுடியவில் கடந்த ஆண்டு ஷூட்டிங் நடந்த போது கிரேன் சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இறந்தவர்கள் குடும்பத்துக்குக் கோடிகளில் நஷ்டஈடு வழங்கப்பட்டது. அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்காமலிருந்தது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட தால் முற்றிலுமாக படப் பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வருடம் ஆகியும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

படப்பிடிப்புகள் தொடங்கி நடத்த அரசு அனுமதி கிடைத்தும் பட நிறுவனம் இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்காமல் காலம் தாழ்த்தியது. கொரோனா கால பொருளா தாரா நெருக்கடியை சுட்டிக் காட்டி மீண்டும் படத்தின் பட்ஜெட்டை குறைக்க இயக்குனரிடம் கேட்டது. ஆனால் ஷங்கர் அதை ஏற்கவில்லை. காத்திருந்து பார்த்த ஷங்கர் லைகா நிறுவனத்துக்குக் கடிதம் எழுதினார். அதில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்க காத்திருக்கிறேன். குறிப்பிட்ட நாட்களுக்குள் தொடங்காவிட்டால் நான் அடுத்த படத்தை இயக்க செல்வேன் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் லைகா தரப்பில் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து ஷங்கர் தனது புதிய பட நிறுவனத்தை சில தினங்களுக்கு முன் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

அதுபற்றியவிவரம் வருமாறு:இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில் மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரானதில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து, "இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுது போக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.இயக்குநர் ஷங்கர் - நடிகர் ராம் சரண் - தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது. இது ராம் சரணின் 15வது திரைப் படமாகவும், ஸ்ரீ வெங்க டேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது மைல்கல் திரைப்படமாகவும் இருக்கும். தில் ராஜுவோடு சேர்ந்து ஷிரிஷ் அவர்களும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு தொடக்க விவரம், ராம் சரணுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.ஷங்கர் நடிகர் ராம் சரண் படத்தைத் தொடங்க உள்ள நிலையில் கமல்ஹாசன் லோலேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இதற்கான தொடக்க விழா டீஸரும் வெளியிடப்பட்டது. தற்போது சட்டசபை பிரசாரத்தில் கமல் ஈடுபட்டுள்ளதால் விக்ரம் படப் படப்பிடிப்பு தள்ளிப்போய் இருக்கிறது. பிரசாரம் முடித்த கையோடு கமல்ஹாசன் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இந்தியன் 2படக் குழு இதுபோல் திசைக்கு ஒரு பக்கம் சென்றுவிட்ட நிலையில் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாகக் கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. இதுபற்றி படத் தரப்பு இன்னும் அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கவில்லை.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>