மறைந்த நடிகை பட பாடல் 1 மில்லியன் பார்வை கடந்து சாதனை..

Advertisement

டி வி தொடர் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ்.இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. வெளிவந்த இரண்டு நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அப்படத்தின் "காலங்கள் கரைகிறதே" எனும் பாடல் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதுவும் வெளிவந்த இரண்டே தினங்களில் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங் #4 ல் உள்ளது. மக்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி தற்போது வெளியிட்ட பாடல் வரை மகத்தான ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இப்படம் வரும் 26 ஆம் தேதியன்று திரைக்கு வர தயாராகவுள்ளது. இப்படக்குழு மக்களிடம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்றும் மறைந்த நடிகை சித்ராவிற்காகவும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்துள்ளனர். மேலும் இப்படத்தின் இயக்குனர் சபரிஷ் பேசுகையில் வி. ஜே சித்ராவின் மரணத்திற்கு பிறகும் மக்கள் அவர் மீதும் அவர் படத்தின் மீதும் அளவற்ற அன்பினை பொழிந்துள்ளனர். அனைவரும் படத்தைத் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் மற்றும் இப்படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் எடுக்கப்பட்டுள்ள பல காட்சிகள், இவருடைய சொந்த வாழ்க்கைக்குத் தொடர்புடையதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.எஸ். ஜெயக்குமார், ஜெ.கா வேரி, திரு.ஜெ.சபரிஷ் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். தமீன் அன்சாரி இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரத் தயாராகவுள்ளது.இறந்த நடிகை வி ஜே சித்ரா முன்னதாக விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா. இதற்கு முன்பு வி.ஜே-வாக இருந்த இவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, வேறு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம்தேதி அதிகாலை 02.30 மணி அளவில், ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் படப் பிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்தார் சித்ரா. அங்கு ஹேம்நாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். அந்த அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவர் ஹேம் நாத்தை நசரத்பேட்டை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.சினிமாவில் நடித்து முன்னணி நடிகை ஆக வேண்டும் என்று சித்ரா எண்ணியிருந்தார். அவரது ஆசைக்கு அச்சாரமாக இன்றைக்குப் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது கால்ஸ் டிரெய்லர். வாழும் போது எண்ணியிருந்த சித்ராவின் லட்சியம் அவர் மறைந்த பின் நிறைவேறி வருவதாக ரசிகர்கள் உருக்கம் தெரிவிக்கின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>