வாயாடி பெத்த புள்ள.. யூடியூபில் படைத்த சாதனை

Aug 31, 2018, 20:14 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் யூடிபில் சாதனை படைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் காமராஜ் இயக்கிய படம் கனா. பெண்கள் கிரிக்கெட் மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா வாயாடி பெத்த புள்ள என்ற பாடலின் முதல் நான்கு வரிகளை பாடினார். இவருடன் சிவகார்த்திகேயன் மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் பாடலை பாடினார்.

ஆராதனாவின் அழகிய குரலால், பட்டித்தொட்டி எங்கும் செம ஹிட் ஆகியுள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாடல் வெளியான 6 நாட்களில், 1 கோடியே 20 லட்சம் பேர் யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

You'r reading வாயாடி பெத்த புள்ள.. யூடியூபில் படைத்த சாதனை Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை