அரசன் படம்...சிம்புவுக்கு உயர்நீதிமன்றம் கெடு...

Sep 1, 2018, 17:22 PM IST
அரசன் படத்திற்காக பெற்ற முன்பணம் 50 லட்சம்  ரூபாய்க்கான உத்தரவாதத்தை 4 வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடுவித்துள்ளது.
 
பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம், கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து அரசன் என்ற தலைப்பில் படம் தயாரிக்க திட்டமிட்டது.
 
இந்தப் படத்திற்காக நடிகர் சிம்புவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, ஐம்பது லட்சம் ரூபாய் ரூபாய் முன் பணமாக கொடுக்கப்பட்டது.
 
ஆனால் படத்தில் நடிக்காத காரணத்தால் முன் பணத் தொகையை திரும்ப வசூலிக்கும் வகையில் பட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "குறித்த காலத்தில் பட தயாரிப்பு பணிகளை துவங்காததால், தனக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் முன் பணத்தை முடக்க வேண்டும்" என நடிகர் சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
"ஆனால் படப் பணிகள் துவங்காததால் இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்களை சிம்பு தரப்பு சமர்ப்பிக்க வில்லை எனக்கூறி, முன்பணமாகப் பெற்ற 50 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து, 85.50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்" என, நடிகர் சிம்பு தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
 
நான்கு வாரங்களில் இந்த உத்தரவாதத்தை வழங்காவிட்டால் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல், பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You'r reading அரசன் படம்...சிம்புவுக்கு உயர்நீதிமன்றம் கெடு... Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை