தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் மோஷன் போஸ்டர் ரிலீஸ் !

அமீர்கானின் பிரம்மாண்ட படமான தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தின் இரு மோஷன் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வைரலாகியுள்ளன.

யாஷ் ராஜ் சோப்ரா பிலிம்ஸ் தயாரிப்பில், விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில், அமீர்கான், அமிதாப் பச்சன், கத்ரீனா கைஃப், சனா நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படைப்பான தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தின் 2 மோஷன் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மிரட்டும் அமிதாப்:

’குதாபக்‌ஷ்’ எனும் மிரட்டும் கதாபாத்திரத்தில் அமிதாப் நடித்துள்ளார். அவரது கேரக்டர் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டு 1.5 மில்லியன் பார்வையாளர்களின் ஆதரவை பெற்றுள்ளது. சிறந்த கதை மற்றும் கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்து வரும் அமிதாப், இந்த படத்தில் மிகவும் தீவிரமான கதாபாத்திரத்தில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வில்லேந்தி வித்தைக் காட்டும் சனா:

இன்று வெளியிடப்பட்டுள்ள ’ஜஃபிரா’ எனும் கதாபாத்திர போஸ்டரில், பாலிவுட் நடிகை சனா, வில்லேந்தி போராடும் வீராங்கனையாக கலக்கியுள்ளார். இந்த படம் வெளியான பின்னர், சனாவிற்கு பாலிவுட்டில் மிகப்பெரிய பிளாட்பார்ம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சனா உள்ளார்.

கத்ரீனா கைஃப், அமீர்கான் போஸ்டர் எப்போது?

நாளை கத்ரீனா கைஃபின் மோஷன் போஸ்டரும் அதனை தொடர்ந்து அமீர்கானின் கதாபாத்திரத்தை ரிவீல் செய்யும் மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குல்ஷன் குமார் பயோபிக்கில் அமீர்கான்:

பி.கே, தங்கல் படங்களை தொடர்ந்து மிகப்பெரிய வெற்றியை கொடுக்க அமீர்கான் உழைத்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து டி-சீரிஸ் நிறுவனர் மற்றும் சினிமா தயாரிப்பாளரான குல்ஷன் குமாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் குல்ஷன் குமார் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 8ம் தேதி, தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படம் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இப்படத்தின் படப்பில் அமீர்கான் கலந்து கொள்ள உள்ளாராம்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds