சூப்பர் டீலக்ஸில் சமந்தா தான் ஹைலைட்டே !

சூப்பர் டீலக்ஸ் படத்தை தயாரித்து இயக்கி இருக்கும் தியாகராஜன் குமாரராஜா படம் பற்றி சமீபத்திய நேர்காணலில் மனம் திறந்தார், ‘சமந்தா இடம்பெறும் காட்சியில் தான் படம் தொடங்கும். மிகவும் துணிச்சலான காட்சி அது.

முக சுளிப்பே இல்லாமல் இயல்பாக நடித்துக்கொடுத்தார். இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை.

ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும். இந்த படம் ஆந்தாலஜி வகையை சேர்ந்தது என்று செய்தி வெளியானது. அப்படி இல்லை. ஒரே கதை தான். சில மணி நேரங்களில் நடக்கும் கதை’ என்று அவர் கூறினார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு பி.எஸ்.வினோத், நீரவ் ஷா இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆரண்ய காண்டம் படம் மூலம் இந்திய அளவில் கவனிப்பை பெற்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

படத்தில் ஷில்பா என்னும் திருநங்கை வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds