சினிமா முடிந்தது.. இனி முழு அரசியல் தான் – கமல்

kamal moves to full time politics

Dec 4, 2018, 18:45 PM IST

இந்தியன் 2 படத்தோடு படம் நடிக்க மாட்டேன். முழு நேர அரசியலில் ஈடுபடப்போகிறேன் என்று கமல் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்ககளான ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வரப்போகின்றனர். கமல் ஏற்கனவே மக்கள் நீதி மையம் என தன் கட்சிக்கு பெயர் சூட்டி தொடங்கிவிட்டார். மேலும் மன்றத்தை ஒருங்கினைத்து நிருவாகிகளை நியமித்து கட்சியை வலுப்படுத்தி வருகிறார்.

ரஜினி இன்னும் தன் கட்சிக்கு பெயர் வைக்கவில்லை. இந்நிலையில் கேரளாவில் கீழகம்பளம் பஞ்சாயத்தின் டுவென்டி-20 திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு  புது வீடு கட்டும் பணியின் துவக்க விழாவில் கமல் கலந்துக் கொண்டார்.    

அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "2019 ஆம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடும்" என்று கூறினார். மேலும் அவரின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ல் துவங்குகிறது என்றும் அந்த படத்திற்கு பிறகு தான் படம் நடிக்க மாட்டேன் என்றும் கூறினார்.

அதற்கு பிறகு தான் கேரளா மற்றும் ஒடிசா முதல்வர்களை சந்தித்தேன். அவர்கள் யோசனைகள், திட்டங்கள் தமிழ்நாட்டில் பிரதிபலிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

You'r reading சினிமா முடிந்தது.. இனி முழு அரசியல் தான் – கமல் Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை