கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மூன்றாவது முறையாக சந்தித்து நிவாரண பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தால், நாகை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. புயல் கரையை கடந்த 20 நாட்களல் ஆகியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்கள் இன்னமும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கால்நடைகள் முதல் பயிர், தோப்பு உள்ளிட்டவை அடியோடு சாய்ந்தன. விவசாயிகளின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலர் நிவாரண பொருட்களும், நிவாரண நிதிகளும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கினார். அதுமட்டுமின்றி, பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.
அதன்படி, இன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில், கொரடாச்சேரி, இளங்கரக்குடி, முசிறியம், விடயாபுரம், காவாளக்குடி, கண்கொடுத்தவணிதம், எருக்காட்டூர், கமலாபுரம், வெள்ளக்குடி, தேவர்கண்டநல்லூர் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், மக்களுக்கு நிவாரண நிதிகளை வழங்கினார்.