என்னது ஜேக்ஸ்பேரோ கதாபாத்திரத்தில் இனி ஜானி டெப் நடிக்கமாட்டாரா?

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் என்று சொன்னால் பலருக்கும் ஞாபகம் வராது. ஆனால், கேப்டன் ஜேக்ஸ்பேரோ என்றால், உடனே அனைவருக்கும் நினைவு வரும்.

கடந்த 14 ஆண்டுகளாக வெளியான 5 பாகங்களில் கேப்டன் ஜேக்ஸ்போரோவாக வாழ்ந்த ஜானி டெப், ஆறாவது பாகத்தில் நடிக்கப் போவதில்லை என டிஸ்னி அறிவித்துள்ளது. 55வயதாகும் ஜானி டெப்பை நீக்கி விட்டு, புதிய நடிகரை நடிக்க வைக்க டிஸ்னி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த செய்தி அறிந்த ஜானி டெப் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

டெட்பூல் படத்திற்கு திரைக்கதை எழுதிய ரெட் ரீஸ் மற்றும் பால் வெர்னிக் இளம் ஜேக்ஸ்பேரோவை புது உத்வேகத்துடன் காட்ட திட்டமிட்டுள்ளதால் தான் ஜானி டெப்பை நீக்கும் நிலை ஏற்பட்டது என டிஸ்னி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் நடித்த இரண்டாவது நாயகன், நாயகி என பல கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் முன்னதாக மாற்றப்பட்டாலும், ஜேக்ஸ்பேரோவாக ஜானி டெப்பே நீடித்து வந்தார்.

இந்நிலையில், அடுத்த பாகத்தில் அல்ல இனி வரும் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களிலும் ஜானி டெப் நடிக்கப் போவதில்லை என தெரிகிறது.

இதுவரை இந்த 5 பாகங்களும் உலகளவில் 31,500 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

எத்தனை ஸ்பைடர் மேன் ஹீரோக்கள் மாற்றப்பட்டாலும், டோபி மார்கே போல வேறு ஒரு ஸ்பைடர் மேனை ரசிகர்கள் ஏற்கவில்லையோ அதே போல் தான் எத்தனை ஜேக்ஸ்பேரோக்கள் வந்தாலும் கேப்டன் ஜானி டெப் தான்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
Kicha-Sudeep-Bayilwaan-Tamil-Trailer-Released
பயில்வானாக மாறிய கிச்சா சுதிப்; ரணகளப்படுத்தும் டிரைலர்!
NammaVettuPillai-Movie-Song-Update
நம்ம வீட்டு பிள்ளை பட பாடலின் அட்டகாச அப்டேட்!
PriyankaChopra protested pakistan
பிரியங்கா சோப்ராவுக்கு செக் வைத்த பாகிஸ்தான்
Nayanathara-s-kolaiyuthir-kaalam-again-postponed
நாளைக்கும் நயன்தாரா படம் ரிலீஸ் இல்லை?
Actor-Kathir-finished-his-portion-in-Bigil-Movie
பிகில் படத்தில் தனது போர்ஷனை முடித்த கதிர்!
Tamilnadu-brahmin-association-condemns-commedy-actor-santhanam-for-defaming-brahmin-community-in-A1-cinema
சந்தானம் நடித்த ஏ1 படத்தை யாரும் பார்க்காதீர்கள்... பிராமணர் சங்கம் வேண்டுகோள்
We-do-not-freedom-speech-express-good-opinions-Film-director-SA-Chandra-Sekar
நல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை
vickram-enjoyed-on-watching-Kadaram-kondan-in-kasi-theatre-with-fans
கடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்
Tanjore-Tamil-girl-mastered-in-Rap-Music-world
ராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி!
Bigil-Song-Leaked-and-goes-viral-movie-crew-was-shocked
லீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்!
Tag Clouds