மைதானத்தில் மலர்ந்த காதல்.. சிட்னி கிரிக்கெட் போட்டியில் சுவாரசியம்

by Balaji, Nov 29, 2020, 18:38 PM IST

சிட்னியில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இன்றைய போட்டியின் போது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிந்த பிறகு இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் திடீரென நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். இதை க்கேட்ட அந்தப் பெண் ஆச்சரியப்பட்டதுடன் நிற்காமல், உடனடியாக அந்த காதலை ஏற்றுக்கொண்டார். இதில் உற்சாகம் அடைந்த அந்த இளைஞர் இந்தப் பெண்ணை தவிட்டு கட்டிப்பிடித்து மகிழ்ந்தார்.

அந்தப் பெண்ணும் இடையிடையே வெட்கத்துடன் அவரது முத்தத்தையும் அணைப்பை யும் ஏற்றுக் கொண்டார். அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் இந்த திடீர் காதலை உற்சாகப்படுத்தினர். நேரலையில் படம்பிடித்துக் கொண்டிருந்த கேமரா இந்த காதலர்களின் பக்கமும் திரும்பியது. அவர்களது காதல் மலர்ந்த அழகிய தருணம் கேமராவில் படம்பிடிக்கப்பட்டது. வர்ணனையாளர்கள் கூட அதை ரசித்தனர், மேலும் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டபோது கிளென் மேக்ஸ்வெல் கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த வீடியோ அடுத்த சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாந்து. ஒரு சில மணித் துளிகளில் மில்லியன் கணக்கான மக்களால் அந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது.

More Cricket News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை