ஒரே நேரத்தில் ஆறு பெண்கள் கர்ப்பம் ஆன ஆச்சரியம்.. திருமண நிகழ்ச்சியில் கெத்தாக கலந்து கொண்ட ஆண்..!

by Logeswari, Nov 29, 2020, 18:40 PM IST

நைஜீரியாவில் ஒரே நேரத்தில் 6 மனைவிகள் கர்ப்பம் ஆன ஆச்சரிய சம்பவம் உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆகி பலரால் பேசப்பட்டு வருகின்றது. மைக் ஈஸ்-ந்வாலி நொகு என்பவர் நைஜீரியாவில் என்ற நாட்டை சார்ந்தவர். இவருக்கு 6 மனைவிகள் ஆகும். சமீபத்தில் இவரது நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு தனது 6 மனைவியுடன் பந்தாவாக கலந்து கொண்டார். திருமணத்தில் கலந்து கொண்டவர்களின் கண்கள் எப்பொழுதும் மாப்பிள்ளை, கல்யாண பெண் ஆகிய இருவரின் மேல் தான் இருக்கும். ஆனால் இந்த திருமணத்தில் சிறிது வித்தியாசமாக வருகை தந்தவர்களின் கண்கள் யாவும் மைக் ஈஸ்-ந்வாலி நொகு மற்றும் அவரது மனைவிகள் மீது மேய்ந்து கொண்டிருந்தது. சொல்ல போனால் திருமணத்தில் இவர்கள் தான் பிரகாசமாக அனைவரின் கண்களுக்கு விருந்தளித்து வந்தனர்.

ஏனென்றால் மைக் ஈஸ்-ந்வாலி நொகு என்பவரின் ஆறு மனைவிகளும் கர்ப்பமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் 6 பெரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் அடைந்ததாக கூறப்பட்டு வருகின்றது. ஆறு மனைவிகளும் சில்வர் நிற ஆடையிலும் மைக் ஈஸ்-ந்வாலி நொகு அவர் மட்டும் பிங்க் நிற ஆடையிலும் தனது 6 மனைவிகளுக்கு நடுவே செம ஸ்டைலாக போஸ் கொடுத்து நின்று கொண்டிருந்தார். இந்த போட்டோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவு செய்து இதில் எந்த வித ட்ரிக்ஸும் இல்லை நாங்கள் எங்கள் வாழ்க்கையை மிக சிறப்பாக வாழ்ந்து கொண்டு வருகிறோம் என்பதை கூறி இருந்தார். இது வரை இந்த போட்டோவுக்கு 64 ஆயிரம் லைக்குக்கள் மற்றும் 100 கணக்கான கமெண்ட்ஸ்கள் வருகை தந்துள்ளது.

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை