மொறு மொறு கிரிஸ்பியான பேபிகார்ன் ஃப்ரை ரெசிபி..!

by Logeswari, Nov 29, 2020, 20:16 PM IST

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த வன்னமாக சுவையான உணவுகளை செய்து அசத்துங்கள்.. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பட்டியலில் இடம்பெற்று இருப்பது பேபிகார்ன் ஃப்ரை. இதை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
பேபி கார்ன் - 10
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
சாட் மசாலாத்தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
கடலை மாவு - 2 ஸ்பூன்
சோள மாவு - 1 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்

செய்முறை:-
முதலில் பேபி கார்னை சூடான தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சாட் மசாலாத் தூள், எலுமிச்சைச் சாறு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு மற்றும் தேவையான உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் பேபிகார்னை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் நன்றாக தோய்த்து எண்ணெயில் பொறித்து கொள்ளவும். சூடான மொறு மொறு பேபிகார்ன் தயார்..

More Samayal recipes News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்