நடராஜனுக்கு ஒரு விதி, விராட் கோலிக்கு ஒரு விதியா?.. பிசிசிஐ-யை சாடிய சுனில் கவாஸ்கர்

by Sasitharan, Dec 22, 2020, 21:53 PM IST

நடராஜனுக்கு ஒரு விதி, விராட் கோலிக்கு ஒரு விதியா? என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 244 ரன்களை எடுத்த இந்தியா அணி, அடுத்த இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்து வரலாறு காணாத வகையில் தோல்வியை சந்தித்தது. இது கிரிக்கெட் ரசிகள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, இந்திய அணி இளம் பந்துவீச்சாளர் தனது பிறந்த முதல் குழந்தையை இன்னும் பார்க்க நாடு திரும்பவில்லை. தற்போது போட்டி நடைபெறும் ஆஸ்திரேலியாவில் உள்ளார். ஆனால், இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது முதல் குழந்தையை பார்க்க நாடு திருப்பி விட்டார். இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்ஸ், போர்ட் ஸ்டார் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், நடராஜனை பாராட்டிய கவாஸ்கர்ஸ், விராட் கோலியையும், இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் தாடியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் நடராஜன் சிறப்பான ஆடினார். ஆட்ட நாயகன் விருதை ஹர்திக் பாண்டியா நடராஜனுக்கு கொடுத்து பெருமைப்படும் அளவிற்கு யார்க்கர் பந்து வீச்சு இருந்தது.

ஐ.பி.எல் ப்ளே ஆஃப் சுற்றுகளின்போது, நடராஜன் தந்தையானார். அவருக்கு முதல் குழந்தை பிறந்தது. இருப்பினும், யுஏஇ நாட்டில் இருந்து டிபிஎல் தொடரை முடித்து கொண்டு நாடு திரும்பாமல், அடுத்த ஆஸ்திரேலியா சுற்றுபயணத்தை மேற்கொண்டார். ஜனவரி மாதத்தின் 3-வது வாரத்தில் இந்தத் தொடர் முடிந்த பிறகு தான் அவர் தனது முதல் பெண் குழந்தையை பார்க்க நாடு திரும்புகிறார். ஆனால், முதல் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த உடனே அணியின் கேப்டன் தனது முதல் குழந்தையைப் பார்க்க நாடு திருப்பி விட்டார். இதுதான் இந்திய கிரிக்கெட் வாரியம், கேப்டனுக்கு ஒரு விதி, வீரருக்கு ஒரு வீதி வைத்துள்ளது. நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நடராஜனைக் கேட்டுப்பாருங்கள் என்று அந்தக் கட்டுரையில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

You'r reading நடராஜனுக்கு ஒரு விதி, விராட் கோலிக்கு ஒரு விதியா?.. பிசிசிஐ-யை சாடிய சுனில் கவாஸ்கர் Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை