ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின்போது, அஸ்வின் மற்றும் விஹாரியிடம் தெரிவித்த ரவி சாஸ்திரி சொல்லி அனுப்பிய தகவலை இருவரிடம் தெரிவிக்க ஷர்துல் தாக்கூர் மறைத்துவிட்டார். சிட்னியில் நடந்த 3 வது டெஸ்ட் தொடரில் அஷ்வின், விஹாரி இருவரும் கடும் நெருக்கடியிலும் போராடி ஆட்டத்தை டிராவில் முடித்தனர்.
அஸ்வினிடம் விஹாரி, நீங்கள் பெளன்ஸர்களை குனிந்து எதிர்கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார். ஆனால்,அஸ்வின், குனிந்தால், நான் அப்படியே கீழே படுத்துவிடுவேன், முதுகுவலி தாங்க முடியல என்றுள்ளார். அதன்பிறகுதான், நேதன் லயன் பந்தை அஷ்வினும், வேகப்பந்தை விஹாரியும் எதிர்கொள்வது என ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தனர்.
இந்த தகவலை தான் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து ஷர்துல் தாக்கூரிடம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொல்லி அனுப்பியுள்ளார். இது தொடர்பான தகவலை அஸ்வின் தனது யூ டியூப் சேனலில், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் உடன் பேசும்போது பகிர்ந்து கொண்டார். ஷர்துலை அழைத்த ரவி சாஸ்திரி அஷ்வின் இந்த எண்டிலும், விஹாரி அந்த எண்டிலும் பேட் செய்ய வேண்டும். நேதன் லயன் பந்தை அஷ்வின் சிறப்பாக எதிர்கொள்வார். விஹாரி வேகப்பந்தை சமாளிப்பார். அதனால், அவர்களை இப்படி விளையாடச் சொல் என சொல்லி அனுப்பினார்.
ஆனால், தகவலை சொல்ல முயன்ற ஷர்துல்லிடம் கேட்டபோது, நான் எதையும் சொல்லப்போவதில்லை. நீங்கள் நன்றாக விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து இதை அப்படியே தொடருங்கள் என்று சென்றுவிட்டார்.