இது தான் ஒரே வழி – ஐ.பி.எல். போட்டிகள் நடத்துவது குறித்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய திட்டம்!

by Sasitharan, Apr 7, 2021, 11:00 AM IST

ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது 14வது ஐபிஎல் திருவிழா. மே 30-ந்தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ipl

ஏப்ரல் 9ம் தேதி நடைபெறும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போட்டியில் களம் காண 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகமாக இருப்பதால் இந்த போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் 3 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. கொல்கத்தா அணியைச் சேர்ந்த நிதிஷ்ராணா, டெல்லி வீரர் அக்ஷர்படேல், பெங்களூர் அணியின் படிக்கல் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ராணா உடல்நலம் தேறியதால் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு கூடிக்கொண்டே செல்லும் நிலையில் வீரர்கள் யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என்று கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது அந்த கருத்திலிருந்து பின்வாங்கியிருக்கிறது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரியம் துணைத்தலைவர் ராஜீவ்சுக்லா பேசுகையில், ``
``கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்த்தால் பாதிப்பில் இருந்து வீரர்களை காக்க அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தான் ஒரே வழி என்று நினைக்கிறேன். வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என்று கிரிக்கெட் வாரியம் சிந்தித்தாலும் தற்போது தடுப்பூசி தேவை என நினைக்கிறதுஎன்றார்.

You'r reading இது தான் ஒரே வழி – ஐ.பி.எல். போட்டிகள் நடத்துவது குறித்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய திட்டம்! Originally posted on The Subeditor Tamil

More Cricket News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை