மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கிண்டலடித்துள்ளார்.
அரசியல்ல புகுந்து விளையாடுங்க... பட். விளையாட்டில அரசியலை கொண்டு வராதீங்க... இந்த வசனம் ஞாபகமிருக்கிறதா? பிகில் பட ஆடியோ ரிலீஸ் விழாவில் நடிகர் விஜய் பேசியதுதான். இந்த மாதிரி வசனங்களை சினிமாவுல கேக்கலாம், இல்லாவிட்டால் சினிமா நடிகர்கள் பேசினால் கேக்கலாம். நிஜத்தில் இதெல்லாம் கிடையாது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அந்த காலத்தில் இருந்து இப்போது வரை அரசியல்வாதிகள் அல்லது பெரும் தொழிலதிபர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அரசியல் தலைவர்கள் சரத்பவார், லாலுபிரசாத், ராஜிவ் சுக்லா என்று பட்டியல் நீளும்.
இப்போது, பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பொருளாளராக மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்குர் தம்பி அருண்துமால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல், ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், பீகார் முன்னாள் கவர்னரும் காங்கிஸ் தலைவருமான டி.ஓய்.பாட்டீல் மகன் விஜய் பாட்டீல் ஆகியோரும் பிசிசிஐ நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி, தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெய்ஷா தேர்வை கிண்டல் செய்திருக்கிறார். அதில், இதுவே ஐ.மு.கூட்டணி ஆட்சியில் எங்க அப்பா சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது, நான் பிசிசிஐ செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தால், இந்த தேசியவாதிகளும் பக்தாஸ்களும் எப்படி பேசியிருப்பார்கள்? ஜஸ்ட் ஆஸ்கிங்.. என்று கிண்டலடித்துள்ளார். உண்மைதான். பக்தாஸ் எல்லோரும் கொதித்தெழுந்து இந்திய கிரிக்கெட்டே பாழாகி விட்டது என்று கமென்ட் போட்டிருப்பார்கள். இப்போது வேறு யாராக இருந்தால் சின்னதா குரல் கொடுக்க முயன்றிருக்கலாம். ஆனால், அமித்ஷாவின் மகன் என்னும் போது...