குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு: டெல்லி வன்முறையில் ஈடுபட்ட 10 பேர் கைது..

10 persons arrested in connection with Jamia violence

by எஸ். எம். கணபதி, Dec 17, 2019, 12:10 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 10 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
குடியுரிைம திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாம், மேகாலயா, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ேபாராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அசாம், மேற்குவங்கம் மற்றும் டெல்லியில் வன்முறைச் சம்பவங்களும் நடந்தன.

டெல்லியில் ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் திரண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. இதையடுத்து, போலீசார் அந்த பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாணவர்களை கைது செய்தனர். அவர்கள் மாணவர்களை கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் கூட மாணவர் இல்லை என்று டெல்லி தென்கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சின்மய் பிஸ்வால் தெரிவித்தார். அவர்கள் ஜமியா பல்கலை, நியூ பிரன்ட்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் ஏற்கனவே குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

You'r reading குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு: டெல்லி வன்முறையில் ஈடுபட்ட 10 பேர் கைது.. Originally posted on The Subeditor Tamil

More Delhi News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை