கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா –தனியார் பள்ளிகளை எச்சரிக்கும் கல்வித்துறை

private schools conducting special class

by Suganya P, Apr 1, 2019, 12:55 PM IST

கோடை விடுமுறையில், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுத்து  நடத்த கூடாது என  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு படிக்கும்  மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நடக்க உள்ளன. இதையடுத்து, மாணவர்களின் கோடை விடுமுறை தொடங்க உள்ள நிலையில், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை  நடத்த கூடாது என்பதை நினைவூட்டும் வகையில் அரசு தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு கோடையில் விடுமுறை விடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில தனியார் பள்ளிகள் அரசு உத்தரவையும்  மீறி சிறப்பு வகுப்புகளை நடத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாகக் கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், ‘கல்வி முற்றிலுமாக வணிகமயம் ஆக மாறிவிட்டது. சில தனியார் பள்ளிகள், பணம் சம்பாதிக்கும் நோக்கில், சிறப்பு வகுப்புகள், சிறப்புப் பயிற்சி வகுப்புகள் எனக் கோடை விடுமுறையில் எடுத்து நடத்தி வருகின்றன. இதை, முற்றிலுமாக, தவிர்க்க வேண்டும். மீறி நடத்தினால், சட்டப் படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். கோடையில், சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்ய மாநில கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் ஆர்வலர்கள்.

கோடை வெயிலின் உக்கிரத்தில், மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுத்தால் sun stroke போன்ற உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

You'r reading கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா –தனியார் பள்ளிகளை எச்சரிக்கும் கல்வித்துறை Originally posted on The Subeditor Tamil

More Education News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை