`அவருக்கு கையெழுத்துகூட போட தெரியாது - மோடியை விளாசிய கெஜ்ரிவால்!

kejriwal slams pm modi

by Sasitharan, Feb 14, 2019, 19:55 PM IST

டெல்லியில் நேற்று பிற்பகல் மூன்று மணி முதல் ‘கூட்டாச்சி மற்றும் அரசியலைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன் நிறுத்தி, இரண்டு நாள்கள் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மம்தாவின் இந்தப் போராட்டத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பலரும் மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கி பேசினர். குறிப்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து காரசாரமாக பேசினார்.

அதில், ``கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, வெறும் 12-ம் வகுப்பு மட்டுமே படித்தவரை பிரதமராக நாட்டு மக்கள் தேர்வு செய்தனர். பிரதமர் மோடிக்கு எங்கே கையெழுத்து போட வேண்டும் என்று தெரியாது. இனிமேலும் அந்த தவறை மக்கள் செய்யக்கூடாது. நாட்டு மக்கள் படிக்காத ஒருவரை மீண்டும் பிரதமராக தேர்வு செய்யக்கூடாது. இனிமேலாவது படித்த ஒருவரை பிரதமராக தேர்வு செய்யுங்கள். படித்தவர்களால் தான் திறன்பட நாட்டை நிர்வகிக்க முடியும்" என்று பேசினார்.

ஆரம்பம் முதலே பிரதமரின் கல்வி தகுதி குறித்து கெஜ்ரிவால் விமர்சித்து வருகிறார். அதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி, 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ., முடித்ததாகத் தேர்தல் விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தார். இதற்கான ஆதாரங்களை காட்டும்படி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. மூன்றாம் நபர் குறித்த விபரங்களைக் கோருவதில் பொதுநலன் ஏதும் இல்லை என்றுகூறி தகவல் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading `அவருக்கு கையெழுத்துகூட போட தெரியாது - மோடியை விளாசிய கெஜ்ரிவால்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை