கஜினி பட ஹீரோ போல வாக்குறுதிகளை எல்லாம் மறந்து விட்டது காங்கிரஸ்: மோடி கலாய்!

காங்கிரஸ் கட்சி கஜினி பட ஹீரோ போல தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மறந்து விட்டது என பிரதமர் மோடி கலாய்த்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, பாலிவுட் படமான கஜினி படத்தின் நாயகன் 15 நிமிடங்களுக்குள் தனது நினைவை இழந்துவிடுவான். அவன் செய்ய நினைக்கும் காரியங்களை 15 நிமிடத்திற்குள் மறந்து தவிக்கும் நோயில் அவதிப்பட்டு வாடுவான். அதுபோல, காங்கிரஸ் கட்சி மூன்றே ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என 2004-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது.

ஆனால், காங்கிரஸ் கட்சியினால், 2009 மற்றும் 2014-ம் ஆண்டு வரை பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும், இதுபோல பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு செய்வதாக வாக்களித்து, மக்களை வறுமையிலே தள்ளி இருந்தது. எங்களுடைய இந்த 5 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில், நாட்டின் பல பகுதிகளுக்கு தடையின்றி மின்சாரம் கொண்டு சென்றுள்ளோம். ஏழைப் பெண்களின் வீட்டில் தினசரி அடுப்பு எரிய கேஸ் மானியம் வழங்கி வருகிறோம் என்றார்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான மொமென்டோ படத்தை தழுவி தமிழில் சூர்யாவை வைத்து கஜினி படத்தை இயக்கி வெற்றி பெற்ற ஏ.ஆர். முருகதாஸ், இந்தியில் ஆமிர்கானை வைத்து அதே படத்தை எடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

பாலிவுட் படமான கஜினி படத்தை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை தனது பேட்டியில் கலாய்த்துத் தள்ளியுள்ளார்.

Advertisement
More India News
p-chidambaram-asks-whether-finance-minister-eats-avocado-instead-of-onion
நிதியமைச்சர் வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா? சிதம்பரம் காட்டம்..
p-chidambaram-says-after-coming-out-jail-my-first-prayers-were-for-the-75-lakh-people-of-the-kashmir
காஷ்மீர் மக்களுக்காக பிரார்த்தனை செய்தேன்.. ப.சிதம்பரம் பேட்டி
amitshah-and-modi-live-in-their-own-imagination-says-rahul-gandhi
மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்.. ராகுல் பேட்டி
congress-leaders-including-p-chidambaram-protest-in-parliament
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா.. ப.சிதம்பரம் பங்கேற்பு
chidambaram-walks-out-of-tihar-jail
திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை.. ராஜ்யசபாவுக்கு வருகிறார்
6-from-tamil-nadu-among-18-indians-killed-in-sudan-blast
சூடான் தொழிற்சாலையில் காஸ் டேங்கர் வெடித்தது.. 6 தமிழர் உள்பட 18 இந்தியர் பலி..
union-cabinet-approved-the-proposal-to-extend-the-scst-reservation
மக்களவை, சட்டசபைகளில் எஸ்சி, எஸ்டி ஒதுக்கீடு.. 10 ஆண்டுக்கு நீட்டிப்பு
isro-chief-sivan-claims-our-own-orbiter-had-located-vikram-landers
சந்திரயான் விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்து விட்டோம்.. இஸ்ரோ தலைவர் பேட்டி
chidambaram-gets-bail-from-supreme-court-in-inx-media-case
105 நாட்களுக்கு பின்பு சிதம்பரத்திற்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
supreme-court-verdict-on-chidambaram-s-bail-plea-tomorrow
ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு..
Tag Clouds