மோடி.. மோடி... என கோஷமிட்ட பாஜகவினர்..! கைகுலுக்கி ஆச்சர்யப்படுத்திய பிரியங்கா..!

by Nagaraj, May 14, 2019, 13:00 PM IST

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சார ஊர்வலம் சென்ற போது, பாஜகவைச் சேர்ந்த ஒரு கும்பல் மோடி, மோடி என உரக்கக் கூச்சலிட்டனர். இதனால் காரை நிறுத்தி இறங்கிய பிரியங்கா சிரித்த முகத்துடன் பாஜகவின் ருடன் கைகுலுக்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

ம.பி.மாநிலம் இந்தூர் மக்களவைத் தொகுதியில் கடைசிக் கட்ட தேர்தல் நடைபெறும்

வரும் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உ.பி.பகுதியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ம.பி.மாநிலத்திற்கு சென்றுள்ள பிரியங்கா காந்தி இந்தூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ம.பி.மாநில முதல்வர் கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் சகிதம் இந்தூர் நகர சாலைகளில் காரில் ஊர்வலமாகச் சென்று பிரியங்கா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது சாலையின் ஓரமாக கும்பலாக திரண்டிருந்த பாஜகவினர், பிரியங்கா வருவதைப் பார்த்தவுடன், மோடி.. மோடி.. என பிரதமர் மோடி ஆதரவு கோஷங்களை உரக்க எழுப்பினர். அப்போது திடீரென காரை நிறுத்தச் சொன்ன பிரியங்கா, விடுவிடுவென , பாஜகவினர் திரண்டிருந்த இடத்திற்குச் சென்றார். சிரித்த முகத்துடன் பாஜகவினரின் கைகளைப் பிடித்து கை குலுக்கி, அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

அத்தோடு மட்டுமின்றி நீங்கள் உங்களுடைய கட்சி வேலையை நன்றாக பார்ப்பது போல், நானும் என் கட்சிப் பணிகளை மேற்கொள்கிறேன் என்று கூறி பாஜகவினரை தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றார்.

பிரியங்காவின் இந்த அதிரடியால் நடந்தது கனவா?நனவா? என்ற பிரமிப்பில் இருந்த பாஜகவினரும் பதிலுக்கு பிரியங்காவுக்கு உற்சாகமாக வாழ்த்து தெரிவித்த சம்பவம்சுப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி என்றே கூறலாம்.

மோடி வெறும் முகமூடி தானா...? கிழிந்தது திரை... கலக்கத்தில் பாஜக!


Speed News

 • சென்னை ராயபுரத்தில்

  3717 பேருக்கு கொரோனா

  தமிழகத்தில் சென்னையில்தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவாக 3,717 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து, தண்டையார்பேட்டை 2,646, தேனாம்பேட்டை 2,374, கோடம்பாக்கம் 2,323, திரு.வி.க. நகர் 2,073, அண்ணாநகர் 1,864, அடையாறு 1,153, வளசரவாக்கம் 1,043 பேருக்கும்  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


   
  Jun 7, 2020, 13:30 PM IST
 • ஜெ.அன்பழகன் உடல்நிலையில்

  ஓரளவு முன்னேற்றம்..

  திமுக மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகனுக்கு கடந்த 2ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் ரேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. 

  இந்நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. ஆரம்பத்தில் 80 சதவீதம் வென்டிலேட்டர் உதவியால் மூச்சு விட்ட அன்பழகன், நேற்று 67 சதவீத வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்தார். இந்நிலையில், அவருக்கு சுவாசிப்பதற்கு வெறும் 29 சதவீத அளவே வென்டிலேட்டர் உதவி தேவைப்படுவதாகவும், அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. 

  Jun 7, 2020, 13:24 PM IST
 • மகாராஷ்டிராவில் 
  82,968 பேருக்கு கொரோனா..
   
  மகாராஷ்டிராவில் இது வரை 82,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில், 37,390 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு பலியானவர் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிராவே முதல் இடத்தில் உள்ளது.
   
   
  Jun 7, 2020, 13:21 PM IST
 • டெல்லியில் நாளை

  ஓட்டல், கோயில்கள் திறப்பு

  டெல்லியில் நாளை முதல் ஓட்டல்கள், கோயில்கள், வணிக வளாகங்கள் திறக்கப்படும் எ்னறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த மாதமே தளர்த்தப்பட்டாலும், வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன. நாளை முதல் இந்த கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது. 

  டெல்லியில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. இது வரை 27,654 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. எனினும், நாளை முதல் டெல்லி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது. 

  Jun 7, 2020, 13:17 PM IST
 • டெல்லி குடிகாரர்களுக்கு

  ஒரு நல்ல செய்தி..

  டெல்லியில் கடந்த மாதம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போது, மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. அப்போது மதுபானங்கள் மீது அதிகபட்ச சில்லரை விற்பனை விலையில்(எம்.ஆர்.பி), 70 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு பணிக்கு நிதி சேர்ப்பதற்காக இந்த ‘கொரோனா வரி’ விதிக்கப்பட்டது.

  இந்நிலையில்,  வரும் 10ம் தேதி முதல் இந்த கொரோனா வரி வாபஸ் பெறப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

  Jun 7, 2020, 13:10 PM IST