போபால்: பள்ளி கழிவறையை தனது கைகளால் சுத்தம் செய்த பாஜா எம்பி ஜனார்தன் மிஷ்ராவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பி ஜனார்தன் மிஷ்ரா. இவர், அம்மாநிலத்தில் உள்ள ரேவா பகுதி காஜூனா என்ற கிராமத்தில் தூய்மை பணிகளை ஆய்வு செய்து வந்தார். அப்போது, அங்குள்ள பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தியபோது, கழிவறை அசுத்தமாக இருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த எம்பி உடனடியாக களத்தில் குதித்தார். தனது இரு கைகளை பயன்படுத்தியே கழிவறையை சுத்தம் செய்தார். இவரது செயலுக்கு பலர் பாராட்டி வருகின்றனர். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..