ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் உள்ளது. பிரேசில், கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 82, 869 பேருக்கும், அமெரிக்காவில் 62,283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகள் பட்டியலில் பிரேசில் முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,211 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 905 பேரும், இந்தியாவில் 631 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3 வது இடத்தில் உள்ளது.
ஆனால் உலக அளவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் உச்சத்தில் இருந்த கொரோனா அதன்பிறகு படிப்படியாக குறைந்தது. இதையடுத்து, கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 1,15,736 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த 4 வாரங்களுக்கு அதிகரிக்கும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கெரோனா ஒரு நாள் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ள நாட்டு மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.