10 லட்சம் பேர் மோடி பின்னால்!- மத்திய அமைச்சர் பெருமிதம்

Jul 31, 2018, 13:54 PM IST

பிரதமர் நரேந்திர மோடியை யூ-டியூப் மூலம் சுமார் 10 லட்ச பின் தொடர்ந்து வருவதாக மத்திய அமைச்சர் நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளப் பக்கமான யூ-டியூப்-ல் பிரதமர் மோடிக்கு அதிக ஃபாலோயர்ஸ்கள் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்த நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் பாசத்துக்கும் மேலும் ஒரு சான்று இது.

அவரை யூ-டியூப்பில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10 லட்சமாகியுள்ளது’ என்றுள்ளார். இந்திய அரசியல் தலைவர்களில் மோடிக்குத்தான் ட்விட்டர் தளத்தில் அதிக ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். அவரை ட்விட்டரில் 4.3 கோடி பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அதேபோல அவரது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தையும் 4.3 கோடி பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading 10 லட்சம் பேர் மோடி பின்னால்!- மத்திய அமைச்சர் பெருமிதம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை