கேரளாவுக்கு ரூ.100 கோடி வெள்ள நிவாரண நிதி - ராஜ்நாத் சிங்

கேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு - ராஜ்நாத் சிங்

Aug 12, 2018, 21:41 PM IST

மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு உடனடியாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

Flood in Kerala

கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கேரள மாநிலம் தத்தளித்து வருகின்றது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண் சரிவால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவ வீரர்கள், கடலோர காவல்படை, விமானப்படை, தேசிய மற்றும் பேரிடர் மீட்பு படையினர், தீயணைக்கும் படை, நீரில் மூழ்கி தேடும் வீரர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Flood in Kerala

இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ராஜ்நாத் சிங் பேசுகையில், “கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உடனடியாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அறிவித்துள்ளார்.

You'r reading கேரளாவுக்கு ரூ.100 கோடி வெள்ள நிவாரண நிதி - ராஜ்நாத் சிங் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை