சர்வதேச வேஷ்டி தினத்தில் கம்பீர நடைப்போட்ட தமிழர்கள்

Advertisement

சென்னை: சர்வதேச வேஷ்டி தினம் நேற்று தமிழர்கள் கொண்டாடினர். அப்போது, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பலர் வேஷ்டி அணிந்து கம்பீரமாய் வலம் வந்து அசத்தினர்.

அந்த காலத்தில் தமிழர்களின் உடை என்றால் வேட்டி தான். ஆனால், மாடர்ன் என்ற கலாச்சாரம் தமிழகத்தில் புகுந்ததில் இருந்து வேஷ்டி, சேலை போன்ற பாரம்பரிய உடைகளுக்கு தமிழர்கள் முக்கியத்துவம் தராமல் இருந்தனர். வெறும் சுப நிகழ்ச்சகளுக்கு மட்டுமே பாரம்பரிய உடைகளை தமிழர்கள் அணிந்து வந்தனர்.

இந்நிலையில் தான் உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோ நிறுவனம் ஜனவரி 6ம் தேதி சர்வதேச வேட்டி தினமாக அங்கீகரித்தது. அதன்முதல், ஆண்டுதோறும் வேஷ்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதேபோல், இந்த ஆண்டும் ஜனவரி 6ம் தேதியான நேற்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பலர் வேட்டி அணிந்து ஒய்யார நடைப்போட்டு தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும் ஆண்கள் பலர் வேஷ்டிகள் அணிந்து சென்றனர். அங்கு கூட்டாக புகைப்படங்கள் எடுத்து தங்களின் சமூக வலைத்தளங்கான பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

சர்வதேச வேஷ்டி தினம் அறிவித்தது முதல், தமிழர்களிடையே வேஷ்டி கட்டுவதில் ஆர்வம் கூடியிருக்கிறது. நமது பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்ற பொறுப்பு மனதில் எழுந்து நிற்கிறது என்பதை சர்வதேச வேஷ்டி தின கொண்டாட்டமே சாட்சி..!

Advertisement
/body>