தண்ணீரை விலைக்கு வாங்கி பயிற்களை காக்கும் விவசாயிகளின் அவல நிலை

Advertisement

திருவாரூர்: தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களை காக்கும் சூழ்நிலைக்கு திருத்துறைப்பூண்டி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் விவசாயிகள் பயிர்களை விளைவிக்கின்றனர். ஆனால், மழை பொய்த்து, தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வறட்சி நிலை உருவாகி உள்ளதால் பயிர்கள் அழிந்துவிடும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனால், வேறு வழியின்றி டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை வாங்கி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

இதற்காக, திருத்துறைப்பூண்டி விவசாயிகள் 800 முதல் 1500 ரூபாய் வரை செலவிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழக விவசாயிகளுக்கு 264 டிஎம்சி காவிரி நீர் தேவை என்று தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
/body>