Friday, May 14, 2021

நேற்று நடந்தது ஐபிஎல் 2020 என யாராவது கோலிக்கு நினைவுப்படுத்துங்களேன் - KXIP vs RCB ரிவ்யூ...!

Karnataka hero to smash Bangalore team

by Loganathan Sep 25, 2020, 08:25 AM IST

ஐபிஎல் லீக் சுற்றின் ஆறாவது போட்டி நேற்று துபாயில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது .

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து , பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது கோலியின் படை.

முதல் ஆட்டத்தில் தோல்வியை பெற்றதால் நேற்றைய ஆட்டத்தை நிதானமாக தொடங்கியது பஞ்சாப் அணி . தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் பொறுப்புடன் விளையாட தனது அதிரடியை தொடங்கினார் மயங்க் ஆனால் எதிர்பாராத விதமாக 7 வது ஓவரை வீசிய பெங்களூரின் ஆஸ்தான பவுலர் சஹலின் கூக்லியில் போல்டானார்.

ஆனால் ராகுலுடன் கைகோர்த்து பூரான் தட்டுதடுமாற , நிதானமாக ஆடி 36 பந்தில் இந்த சீசனில் , தனது முதல் அரைசதத்தை கடந்தார் பஞ்சாப் கேப்டன் ராகுல்.

ஒருபுறம் விக்கெட் விழ மறுபுறம் பேயாட்டம் ஆடிய ராகுல் , பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர்களை திக்குமுக்காட வைத்தார். இந்த தருணத்தில் ராகுல் கோலியிடம் கேட்ச் கொடுக்க அந்த வாய்ப்பையும் தவறவிட்டார் அப்பாவி கோலி.

கோலியிக்கு , ராகுலை அவுட் ஆக்க கிடைத்த இரண்டு வாய்ப்பையும் தவறவிட்டு ரசிகர்களையும் ஏமாற்றினார். இதனால் தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ராகுல் கடைசி 14 பந்தில் மட்டும் 43 ரன்களை விளாசி இந்த சீசனின் முதல் சதத்தை பதிவு செய்தார்.

பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் 69 பந்தில் 7 சிக்சர் , 14 பவுண்டரி என மொத்தம் 132 ரன்களை எடுத்து சாதனை படைத்தார் . மேலும் குறைந்த இன்னிங்ஸ்சில் 2000 ரனிளை கடந்த வீர்ரகள் பட்டியலில் சச்சினை முந்தி மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இருபது ஓவர் முடிவில் 206 / 3 ரன்களை எடுத்திருந்தது . 207 ரன் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்கமே பெரிய சருக்கலாக இருந்தது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய படிக்கல், காட்ரெல் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் நடையை கட்டனார்.கோலியின் வரவை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக பிளிப்ஸ் இறங்க அவரும் ஷமி வீசிய இரண்டாவது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார்.

கோல் , பின்ச் இணையாவது அணியை சரிவிலிருந்து மீட்குமா ? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பந்திற்கு 1 ரன் எடுத்து காட்ரல் ஓவரில் ஓய்வெடுக்க பெவிலியன் திரும்பிவிட்டார் படைத்தலைவன் கோலி.ஒருபுறம் விக்கெட்டுகளை பஞ்சாப் அணியினர் மளமளவென அள்ளினர் . சிறிது நேரம் போராடிய பின்ச் மற்றும் டிவில்லியர்ஸ் இணையும் தாக்குப்பிடிக்க முடியாமல் பஞ்சாப் பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்து விட்டனர்.

அடேங்கப்பா ! என் ஆச்சரியப்படும் வீர்ர்களை கொண்ட பெங்களூர் அணி 17 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 109 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்த சீசனில் அதிகப்படியாக 97 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது பஞ்சாப் அணி.

டாஸ் ஜெயித்த பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கலாம். அவர்களின் பந்து வீச்சின் மோசமான தன்மையை அவர்கள் அறிந்ததே எனவே கோலி பந்து வீச்சை தேர்வு செய்தது தவறான முடிவு. 15.2 வது ஓவர் வரை 128 /3 என்ற நிலையில் இருந்த பஞ்சாப் அணி , கடைசி 28 பந்தில் 78 ரன்களை விளாசியது . இன்றைய போட்டியிலும் கோலி , 2 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்த சுந்தரை சரியாக பயன்படுத்தாமல் போனதும் தோல்விக்கு ஒரு காரணம்.

ஒருவேளை கோலி , ராகுலின் கேட்ச் வாய்ப்பை பிடித்திருந்தால் அணியின் மொத்த ரன் 40- 48 ரன்கள் குறைந்து , பஞ்சாப் அணியின் ரன்னை 178-183 ரன்களுக்குள் நிறுத்தியிருக்கலாம்.

இதே சென்னை அணி 200 ரன்களை இலக்காக கொண்டு இறங்கியபோது இவ்வளவு எளிதாக அவர்கள் சரணடையவில்லை . ஒரு அணியாக ஒன்றிணைந்து பிரதிபலிப்க்க கோலியால் இயலவில்லை என்பதே தோல்விக்கு காரணம். அவர் இன்னும் அணியின் சாதகபாதகங்களை உணர வேண்டும். இந்த வெற்றியின் மூலம் 2.425 ரன்ரேட் விகிதத்தில் முதலிடத்தை பிடித்தது பஞ்சாப். இந்த நாள் ராகுலின் நாளாக அமைந்து விட்டது. வாழ்த்துக்கள் கேப்டன் ராகுல்.

இன்று IPL போட்டியில் மோத இருக்கும் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மறக்காமல் தங்களது கருத்து பிரிவில் பதிவிடுங்கள்

You'r reading நேற்று நடந்தது ஐபிஎல் 2020 என யாராவது கோலிக்கு நினைவுப்படுத்துங்களேன் - KXIP vs RCB ரிவ்யூ...! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை