29 சிக்சர் ! 34 பவுண்டரி ! 449 ரன்கள் என நேற்றைய போட்டியில் வானவேடிக்கைக்குப் பஞ்சம் இல்லை !

39 Sixer! 34 fours! No famine for fireworks in yesterdays match as 449 runs!

by Loganathan, Sep 28, 2020, 09:58 AM IST

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் , ஷார்ஜாவில் மோதின‌. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.சிறிய ஆடுகளமான ஷார்ஜாவில் நடந்த முதல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதின. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 216 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்து வெற்றியும் பெற்றது.

இந்நிலையில் நேற்றைய போட்டியிலும் ரன் மழை பெய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி , ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை எல்லா திசைகளிலும் தெறிக்கவிட்டனர்‌. தொடக்க இணையான ராகுல் மற்றும் அகர்வால் இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினர்.17 வது ஓவர் வரை இவர்களின் இணையைப் பிரிக்க முடியாமல் விழி பிதுங்கினர் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் .

13 வது ஐபிஎல் சீசனின் இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார் பஞ்சாப் அணியின் மயங்க அகர்வால். இது இந்த சீசனில் மயங்க்கின் ( 50 பந்துகளில் , 10 பவுண்டரி , 7 சிக்சர் என மொத்தம் 106 ரன்கள் )முதல் சதம் ஆகும். மயங்க் உடன் சேர்ந்து சிறப்பாக ஆடிய ராகுலும் ( 54 பந்தில் 7 பவுண்டரி 1 சிக்சர் என 69 ரன்கள் ) தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

நேற்றைய போட்டி சாதனைகளுக்காகவே நடத்தப்பட்டதோ என்ற அளவிலிருந்தது. தொடக்க இணையாக ராகுல் மற்றும் அகர்வால் சேர்ந்து 183 ரன்களை அடித்தனர். தொடக்க இணையாக அடிக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்கோர் இதுவாகும்.பஞ்சாப் அணி இருபது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 223 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்து.

224 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி. இதுவரை ஐபிஎல் சீசனில் சேசிங் செய்யப்பட்ட அதிகபட்ச ரன் 215 ஆகும். 224 ரன் சேசிங் செய்யப்பட்டு, மிகப்பெரிய ரன் சேசிங் செய்து சாதனை படைத்து ராஜஸ்தான்.

தொடக்க இணையாகக் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் நிதானமாக இன்னிங்க்ஸை தொடங்கினர்.ஜோஸ் பட்லருக்கு இந்த சீசனின் முதல் போட்டி இது. எனினும் மிகப்பெரிய இலக்கை அடைய வேண்டிய கட்டாயத்தில் ஆட வேண்டிய சூழ்நிலையில் 7 பந்துகளைச் சந்தித்த பட்லர், காட்ரல் ஓவரில் கேட்சாகி வெளியேறினார்.பின்னர் இணைந்த கேரள புயல் சஞ்சு சாம்சனும், ஸ்மித்தும் கைகோர்க்க மீண்டும் வானவேடிக்கை நடந்தது. முதல் பாதியில் ராஜஸ்தான் பவுலர்கள் மிரண்டதை போல இரண்டாம் பாதியில் பஞ்சாப் பவுலர்களின் நிலைமை மோசமானது .

ஸ்டீவ் ஸ்மித் அலட்சியமாகத் தனது அரைசதத்தை 27 பந்தில் 7 பவுண்டரி 2 சிக்சர் மூலம் பூர்த்தி செய்தார். மற்றொருபுறம் சாம்சன் பந்துகளை மின்னல் வேகத்தில் பவுண்டரி லைனுக்கு வெளியே அனுப்பும் வேலையைச் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார்.100 ரன்களை ராஜஸ்தான் அணி எடுத்திருந்த போது ஸ்மித் , நீஷம் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். இதனால் வெற்றி வாய்ப்பு பஞ்சாப் அணி பக்கம் சாய்ந்தது .சாம்சன் ஒருபுறம் மிரட்ட அவருடன் இணைந்து திவேடியா தனது இன்னிங்சை மெதுவாகத் தொடங்கினார்.

பஞ்சாப் அணியின் முகமது ஷமி வீசிய 17 வது ஓவரின் முதல் பந்தில் சாம்சன் ( 42 பந்தில் 4 பவுண்டரி 7 சிக்சர் ) வெளியேறினார். இதனால் ஆட்டத்தின் வெற்றி வாய்ப்பு பஞ்சாப் அணிக்குப் பிரகாசமானது .காட்ரல் வீசிய ஓவரில் யாருமே எதிர்பாராத நிலையில் திவேடியா அதிரடியாக 5 சிக்சர்களை விளாசி மிரண்டுபோனது பஞ்சாப் அணி. வெற்றி வாய்ப்பையும் ராஜஸ்தான் அணியின் பக்கம் திரும்பியது.

எளிதாக வெல்வதற்கான வாய்ப்பு காட்ரல் ஓவரில் பறிபோனது. பின்னர் வீசிய 19 வது ஓவரில் திவேடியா மற்றும் ராபின் உத்தப்பா என இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். இருந்தாலும் வெற்றிக்கு , கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் இறுதி ஓவரை அஷ்வின் வீசினார் முதல் பந்து டாட் பாலாக , இரண்டாவது பந்தில் பராக் விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் கடைசி ஓவரின் 3வது பந்தில் பவுண்டரி அடித்து மிரட்டலான வெற்றியைப் பதிவு செய்தனர் ராஜஸ்தான்.

இன்று IPL போட்டியில் மோத இருக்கும் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மறக்காமல் தங்களது கருத்து பிரிவில் பதிவிடுங்கள்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Ipl league News

அதிகம் படித்தவை