கேப்டன் இன்னிங்க்ஸை தொடங்கிய கோலி! மண்டியிட்ட ராஜஸ்தான் !

ஐபிஎல் லீக் சுற்றின் பதினைந்தாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணியும் அபுதாபியில் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க இணையாக களமிறங்கிய ஸ்மித் மற்றும் பட்லர் இருவரும் இன்னிங்சை மெதுவாக தொடங்கினர். ஆனால் எதிர்பாராத விதமாக உடானா ஓவரில் ஸ்மித் போல்டாகி நடையை கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் சஹல் ஓவரில் காட்டன் போல்ட் ஆக ராஜஸ்தான் அணி 31/3 என்ற இக்கட்டான நிலையை அடைந்தது.

இந்தமுறையாவது உத்தப்பா ஆடுவாரா? என்ற எதிர்ப்பார்ப்பை தவிடுபொடியாக்கிவிட்டு வெளியேறினார். ஆனால் இன்றைய போட்டியில் சேர்க்கப்பட்ட லோம்ரோர் மட்டும் சிறப்பாக விளையாடி 47 ரன்களை கடந்தார்.

இறுதியில் திவேதியா மற்றும் ஆர்சர் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை மதிக்கத்தக்க அளவிற்கு கொண்டு வந்தனர். இருபது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 154/6 ரன்களை சேர்த்தது.

பெங்களூர் அணி சார்பில், அணியின் மற்றும் கோலியின் ஆஸ்தான பவுலர் சஹல் மூன்று விக்கெட்டுகளை சாய்த்து அணிக்கு பலம் சேர்த்தார். உடானா சார்பாக 2 விக்கெட்டுகள் மற்றும் சைனியின் வேகத்தில் 1 விக்கெட் வீழ்த்தப்பட்டது.

பெங்களூர் அணி 155 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. படிக்கல் மற்றும் பின்ச் இருவரும் இன்னிங்சை தொடங்க, ஷ்ரேயாஸ் கோபால் வீசிய பந்தில் lbw ஆகி வெளியேறினார் பின்ச்.

இன்றைய போட்டியிலும் பெங்களூர் சொதப்பிவிடும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படிக்கல் மற்றும் கேப்டன் கோலி இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர்.

கேப்டன் கோலி கடந்த மூன்று போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும் படி சிறப்பாக செயல்படவில்லை. அதனால் இந்த போட்டியில் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால் மெதுவாக இன்னிங்சை தொடங்கி 53 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர் என 72 ரன்களை குவித்து சிறப்பாக ஆட்டத்தை முடித்து, கேப்டன் இன்னிங்சை இன்று அருமையாக தொடங்கி வைத்துள்ளார்.

ஒருபுறம் தேவ்தத் படிக்கல் 45 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சர் என 63 ரன்களை சேர்த்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர்களின் இணையை பிரிக்க முடியாமல் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் விழிபிதுங்கி நின்றனர். மேலும் பெரிய ஆடுகளங்களில் ராஜஸ்தான் அணியின் பாட்சா பளிக்கவில்லை.

இன்றைய போட்டியில் கேப்டன் கோலி பந்து வீச்சாளர்களை சரியான இடத்தில் பந்து வீச அழைத்ததும் வெற்றிக்கு காரணம்.

இந்த மாதிரியான இன்னிங்சை தான் எதிர்பார்க்கிறோம் கோலி ! இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் !

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
adam-zampa-talk-about-ipl
ஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா
pat-cummins-donates-50000-to-pm-cares-fund
என்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்
the-lowest-score-by-rcp-in-ipl-t20-cricket-history
ஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி!
jofra-archer-out-of-ipl
நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்?
raina-touch-harbhajan-singh-feet
ஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
pragyan-ojha-reveals-the-reason-why-ms-dhoni-never-wishes-his-teammates-good-luck
தோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!
csk-should-build-their-team-around-him-michael-vaughan-picks-ravindra-jadeja
தோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம்! – மைக்கேல் வாகன் கருத்து
rashid-khan-s-instagram-reel-of-kane-williamson-and-david-warner-has-gone-viral
`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்!
Tag Clouds

READ MORE ABOUT :