என்னை அதிகம் ஈர்த்து விட்டார் - வருண் சக்கரவர்த்தி குறித்து நெகிழும் சச்சின்!

sachin talks about varun Chakravarthy

by Sasitharan, Oct 27, 2020, 19:01 PM IST

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் 27 முதல் ஜனவரி 19 ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. தலா 3 டி20, ஒருநாள் போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் நடக்க இருக்கின்றன. இதற்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் நடப்பு ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடியதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக வருண் சக்கரவர்த்தி அணியில் இடம்பிடித்திருப்பது பல்வேறு தரப்பினரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் முதல் முறை 5 விக்கெட் ஹால் எடுத்து அசத்தினார். மேலும் பேட்ஸ்மேன்கள் ரன் எடுப்பதை தனது கூக்ளி, மற்றும் லெக் ஸ்பின்னால் அசத்தலாக தடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் வருண் குறித்து கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். அதில், ``இந்த ஐபிஎல் தொடரில், வருண் சிறப்பாக பந்துவீசிகிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சுனில் நரேன் மாதிரியான பந்துவீச்சாளர்கள் பந்து வீசும்போது, எதிர்முனையில் இருக்கும் பந்துவீச்சாளர்களைத் தான், பேட்ஸ்மேன்கள் அதிகம் பிரஷர் கொடுப்பார்கள். ஆனால் அந்த பிரஷரை எளிதில் கையாண்டு, மிகச் சிறப்பாக பந்துவீசி என்னை அதிகம் ஈர்த்து விட்டார் வருண்.

அவரின் தன்னம்பிக்கை பந்துவீச்சில் வேரியேஷனும் கொடுக்க முடிகிறது. இவரைப் போல தன்னம்பிக்கை கொண்ட பந்துவீச்சாளர்கள் பௌலிங் செய்யும் போது எதை செய்ய வேண்டுமென திட்டமிடுகிறார்க்ளோ, அதை செயல்படுத்தவும் முடியும்" எனக் கூறியுள்ளார்.

More Ipl league News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை