டாப் போர் அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன?

by Loganathan, Nov 4, 2020, 10:48 AM IST

ஐபிஎல்2020 திருவிழா அதன் கடைசி கட்டத்தை நெருங்கிவிட்டது. லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் முதல் நான்கு இடங்களை பல போராட்டங்களுக்கு பிறகு இடம்பிடத்துள்ளனர். இவர்களில் அரியணை ஏற போவது யார் என்பது தான் இந்த திருவிழாவின் கிளைமேக்ஸ். புள்ளி பட்டியலில் எந்தவித போராட்டமும் இல்லாமல் லீக் சுற்றில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று மும்பை அணி முதலிடத்தில் உள்ளது. 8 போட்டிகளில் வெற்றி பெற்ற டெல்லி அணி இரண்டாம் இடத்திலும், தலா 7 போட்டிகளில் வெற்றி பெற்ற ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் ரன்ரேட் முறையில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணி

மும்பை அணியை பொறுத்தவரை அதன் பலம் பேட்ஸ்மேன்கள் தான். முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட் வீழ்த்தப்பட்டாலும் அந்த இடத்தில் இருந்தே திருப்பி எழும் பலமான பேட்ஸ்மென்கள் யூனிட்டை கொண்டுள்ளது. அதே சமயம் பந்துவீச்சை பொறுத்தவரை ட்ரன்ட் போல்ட் சரியான லென்தில் பந்து வீச தவறும் போது, எதிர்பார்ப்புகள் அனைத்தும் பும்ராவின் மீது விழுவதால் பந்துவீச்சில் சாதகமான சூழலை அவர்களால் உருவாக்க முடியவில்லை. மேலும் கடந்த சில போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா சரியாக விளையாடாதது அணிக்கு சோர்வை ஏற்படுத்தும். அவர் ஃபார்ம்மிற்கு திரும்பாத பட்சத்தில் அவர் இல்லாமலேயே விளையாடலாம். ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லார்ட் அவர்களின் பணியை சிறப்பாக செய்கின்றனர்.

டெல்லி அணி

இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணியை பொறுத்தவரை பேட்ஸ்மேன், பந்து வீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் என அனைத்திலும் சரியான கலவையில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு சரியான தொடக்க இணை அமையாதது பெரிய பலவீனம். மேலும் கடந்த போட்டியில் பார்ம்மிற்கு திரும்பிய ரகானே அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார். மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர், ஃபண்ட் மற்றும் ஸ்டேய்னஸ் போன்ற அதிரடி பட்டாளமே உள்ளது. பந்துவீச்சில் ராபாடா தவறும் போது, தனது பந்து வீச்சில் அசத்தும் நோர்ட்ஜா இருவரும் வேகப்பந்து வீச்சில் மிரட்டுவது பலம். மேலும் சுழல் பந்து வீச்சை பொறுத்தவரை அஷ்வின் மற்றும் அக்சர் பட்டேல் என்ற மாயாஜால வீரர்கள் அணிக்கான பலம். டெல்லி அணியின் பலவீனம் என்ற பார்த்தால் அவர்களின் ஒன்றினையாத ஆட்டம் தான். அவர்கள் அணியாக செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

ஹைதராபாத் அணி

கடந்த சில போட்டிகளில் பெற்ற வெற்றியால் அணியின் நம்பிக்கை தான் அவர்களின் பலம். ஆர்ச்சரை போன்று வேகமான பந்து வீச்சாளர்கள் இல்லை என்றாலும், ஸ்விங் பந்து வீச்சாளர்கள் அணியின் பலம். சுழல் பந்துவீச்சில் இதுவரை ரஷித் கான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது அணிக்கு எந்தவித பாதகத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் அவர் ஃபார்ம்க்கு திரும்புவது அணிக்கான கட்டாய தேவை. பேட்ஸ்மேன்கறை பொறுத்தவரை சஹா மற்றும் வார்னர் கலக்கி வருகின்றனர். வில்லியம்சன்,பாண்டே மற்றும் ஜேசன் ஹோல்டர் போன்ற பலமான மிடில் ஆர்டர்கள் இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து சொதப்புவது அணிக்கான பலவீனம்.

பெங்களூர் அணி

புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள பெங்களூர் அணியின் பலம் அவர்களின் பேட்ஸ்மேன்கள் மட்டுமே. முன்னணி பேட்ஸ்மென்கள் அசத்தும் பட்சத்தில் மிடில் ஆர்டர்கள் சொதப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளது பெங்களூர் அணி. மேலும் தொடர்ந்து சொதப்பி வரும் கேப்டன் கோலியின் ஆட்டம் பெரிய தலைவலியாக உள்ளது பெங்களூர் அணிக்கு. இதனால் டிவில்லியர்ஸ் மீது எதிர்பார்ப்பு கூடுவதால், அவரின் இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்த முடியவில்லை. பெங்களூர் அணியின் பலவீனம் மிடில் ஆர்டர் மற்றும் சுமாரான பந்து வீச்சு. சுழல் பந்துவீச்சை பொறுத்தவரை சஹல் சோபிக்க தவறும் பட்சத்தில் அவர்களால் வெற்றியை பெறவே முடியவில்லை. பெங்களூர் அணி இறுதி போட்டிக்குள் நுழைவது கடினம். அவர்கள் மிடில் ஆர்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் முயன்று பார்க்கலாம்.

You'r reading டாப் போர் அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன? Originally posted on The Subeditor Tamil

More Ipl league News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை