சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பாயாசம்.. ட்ரை பண்ணி இருக்கீங்களா.. ??

Have you tried Sweet potato Payasam

by Isaivaani, Feb 18, 2019, 20:33 PM IST

பாயாசத்தில் பருப்பு பாயசம், பால் பாயசம் என எத்தனையோ வகை பாயாசம் பற்றி கேள்விப்பட்டு இருப்போம்.. ருசித்திருப்போம். ஆனால் சக்கரைவள்ளி கிழங்கில் பாயசம் ட்ரை பண்ணி இருக்கீங்களா ?

தேவையான பொருட்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1

வெல்லம் - 50 கிராம்

தேங்காய் பால் - அரை டம்ளர்

ஏலக்காய் - 2

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி கேரட் துருவியில் துருவி தனியாக வைக்கவும்.

பிறகு, துருவிய கிழங்கை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக விடவும்.

பின்னர், கிழங்கு வெந்ததும் அதில் ஏலக்காய், வெல்லம், உப்பு போட்டு கலக்கவும்.

அத்துடன், தேங்காய் பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

அவ்ளோதாங்க சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் ரெடி..!

குறிப்பு: பாயாசத்துடன் சிறிதளவு மைதா சேர்த்தால் தண்ணியாக இருக்கும் பாயாசம் கொஞ்சம் கெட்டியாகும்.

You'r reading சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பாயாசம்.. ட்ரை பண்ணி இருக்கீங்களா.. ?? Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை