ஸ்மார்ட்போன்களில் தொடர்ந்து கேம் விளையாடுபவர்களின் ஒரே கவலை உடனடியாக பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிடுவதுதான். அந்த கஷ்டத்தை போக்க ஓப்போ நிறுவனம் ஒரு புதிய ஆச்சர்ய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓப்போ ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் ரெனோ ஏஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி மூலம் அரை மணி நேரத்தில் 4000 எம்.ஏ.எச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய முடிகிறதாம்.
இதுகுறித்த ஒரு புதிய டீசரை வெளியிட்டுள்ள ஓப்போ நிறுவனம், சாதாரண சார்ஜர் மற்றும் ஓப்போவின் 65வாட் சூப்பர் VOOC அதிவேக சார்ஜ் கொண்டு சம நேரத்தில் பரிசோதிக்கப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், வெறும் 35 நிமிடத்தில் 4000 எம்.ஏ.எச். திறன் கொண்ட பேட்டரியை ஓப்போவின் ரெனோ ஏஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி சார்ஜ் செய்து அசத்துகிறது.
சாதாரண ஸ்மார்ட் போன் அதை விட இரு மடங்கு நேரம் அதிகமாக சார்ஜ் செய்ய எடுத்துக் கொள்கிறது. ஓப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போனான ஓப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் தான் இந்த புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து விதமான புதிய ஓப்போ ஸ்மார்ட்போன்களிலும் இந்த வகையிலான ஹை ஸ்பீட் சார்ஜ் டெக்னாலஜியுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.