பியூட்டி பார்லர் வேண்டாம்!!வீட்டிலேயே ரெட் ஒயின் பேசியல் செய்வது எப்படி??

by Logeswari, Sep 3, 2020, 18:15 PM IST

ஒயின் குடித்தால் முகம் பல பல வென்று மின்னும் என்று நிறைய புத்தகத்தில், இணையத்தளத்தில் படித்துள்ளோம்.ஆமாங்க உண்மைதான் சிவப்பு ஒயின் குடிப்பதால் முகம் பொலிவடைய செய்யும்.. பெரிய பியூட்டி பார்லர் எல்லாம் இதை தான் பயன்படுத்துகிறார்கள். ரெட் ஒயினை வைத்து எப்படி வீட்டிலே பேசியல் செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:-

ரெட் ஒயின்

எலுமிச்சை பழச்சாறு-1 ஸ்பூன்

காபி தூள்-சிறிதளவு

பன்னீர்-2 ஸ்பூன்

பேசியல் செய்யும் முறை:-

முதலில் ரெட் ஒயின்,எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து கொள்ளவும். இக்கலவையை பஞ்சினால் நனைத்து முகத்தில் தடவ வேண்டும்.நன்கு மசாஜ் செய்த பிறகு முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி கொள்ளவேண்டும்.

அடுத்து ரெட் ஒயின்,காபி தூள் போன்றவை சேர்த்து முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும்.பிறகு தண்ணீரில் கழுவிவிட வேண்டும்.

ரெட் ஒயினுடன் பன்னீரை கலந்து முகத்தில் தடவி 15 -20 நிமிடம் ஊறவைக்கவும்.பின்பு நீரினால் முகத்தை கழுவினால் முகம் தங்கம் போல் ஜொலிக்கும்...

READ MORE ABOUT :

More Aval News

அதிகம் படித்தவை